ஆ.ஆ.ஆஆஆ…
நீ முன் போலவே வந்துபிறப்பதை எண்ணித்தவமிருப்பேன்
அது எங்கோஎன்றோ என்று பாட்டினில் கேட்டு-அழுதிருப்பேன்
(1+SM+1)
என்று கண்கள் உனைக் காணும் என நெஞ்சம்
தினம் ஏங்கும்
நீ முன் போலவே வந்துபிறப்பதை எண்ணித்தவமிருப்பேன்
அது எங்கோஎன்றோ என்று பாட்டினில் கேட்டு-அழுதிருப்பேன்
(MUSIC)
சாயி நாமம் சாயி கீதம் என்றும் பாடுவேன்
இரண்டும் எந்தன் கண்கள் போலப் போற்றி வாழுவேன்
சாயி நாமம் சாயி கீதம் என்றும் பாடுவேன்
ப்ரேம சாயி ரூபம் மண்ணில் தோன்றப் பாடுவேன்
சாயிரங்கா நெஞ்சிரங்காய் எந்தன்பாட்டில் கண்டகுறை என்ன
பர்த்தி ரங்கன் உன்னை அந்த காலன் கொள்வதோ
என்றிரங்கல் பாடி நானும் தினமும் நோவதோ
அன்புப் பிள்ளை கொண்ட தொல்லை
போக்கத் தந்தை வந்திடாத தென்ன
நீ முன் போலவே வந்துபிறப்பதை எண்ணித்தவமிருப்பேன்
அது எங்கோஎன்றோ என்று பாட்டினில் கேட்டு-அழுதிருப்பேன்
(MUSIC)
தந்த வாக்கு உனக்குக்கூட மறந்து போனதே + (SM)
உந்தன் போக்கு விளங்கிடாத புதிருமாவதேன் + (SM)
சேவைஎன்ற பாதைதந்து மண்துறந்து ஓடிச்சென்றதென்ன
பாடல் என்னைப் பாடச் சொல்லி கேலி செய்தல் போல்
வாடச் சொல்லி வாழச் சொல்லி நீயும் செல்கிறாய்
ஸ்வாமியுன்னை சூக்குமத்தில் காணும்திறன்
என்னிடத்தில் இல்லை
நீ முன் போலவே வந்துபிறப்பதை எண்ணித்தவமிருப்பேன்
அது எங்கோஎன்றோ என்று பாட்டினில் கேட்டு-அழுதிருப்பேன்
என்று கண்கள் உனைக் காணும் என நெஞ்சம்
தினம் ஏங்கும்
No comments:
Post a Comment