Tuesday, May 19, 2020

294. எங்கே என் தாய்((கண்ணன் வந்தான்)***


(Aligned to KARAOKE)

விருத்தம்
என்பினால் செய்ததில்லை அன்புடலே  சாய்க்கு
கல்லெனக்கும் கசிந்துருகும் அவள்மனமே பாகு
நான்பசித்துப் பொறுப்பாளா தான்ருசித்து உண்பாளா
என்தாயின் அன்புமுகம் எங்கே எங்கே
  (MUSIC)
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் 
பிள்ளை கண்ணீரில் வாடுறேன் எங்கே என் தாய்
(2)
எங்கே என்தாய்
 (MUSIC)
தேடிஎங்கும் கண்டிலனே எங்கே-என்தாய்
சாபம் என்ன அறிந்திலனே எங்கே-என்தாய்
(2)
கேட்கத் தேவை ஒன்றிலாமல்  அன்பாய் என் தாய் 
கேள்விகளே இல்லாமல் தருவாள் என்தாய்
 
தர்ம ரூபம் கொண்டு சாயி என்றே வந்தாள்
தாளாத துயர்தந்து எங்கே சென்றாள் ?
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் எங்கே என்தாய் 
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் 
பிள்ளை கண்ணீரில் வாடுறேன் எங்கே என் தாய்
எங்கே என்தாய் ..
(MUSIC)
முடியவில்லை அடங்கவில்லை என்றே மனம் 
துடிக்கிறதே அழுகிறதே நொந்தே தினம் 
(2)
முரடன் எனை வந்தணைக்கும் என்தாய் மனம் 
மூடன்எந்தன் பிழைபொறுக்கும் என்தாய் மனம்
(2)
கிடையாது வேறெவர்க்கும் அந்நிதானம் 
அஞ்சாமை தந்து நிற்கும் சாயி பாதம் 
சாயி பாதம் எந்தன் தாயின் பாதம் ஸ்வாமி பாதம்
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் 
பிள்ளை கண்ணீரில் வாடுறேன் எங்கே என் தாய்
எங்கே என்தாய்
சாய்மா.. அம்மா.. சாய்மா.. அம்மா
(MUSIC)
கருணை கொண்டு மண் பிறந்து வாட்டம் போக்கும் 
ப்ரேமை என்னும் கை நீட்டிக் காக்கவேண்டும்
(2)
குழந்தை குரல் கேட்டு வரும் தாயைப் போலும்
விரைந்து வந்து நீயும் எனைத் தூக்க வேண்டும் 
(2)
திவலைகளைக் கண்விடுத்து அழுதேன் சாய்மா 
கடலிலே இடமில்லைக் காண்பாய் அம்மா
திவலைகளைக் கண்விடுத்து அழுதேன் சாய்மா 
உடலிலே திடமில்லைக் காண்பாய் அம்மா

சாய்மா…அம்மா.. சாய்மா.. அம்மா

எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் 
பிள்ளை கண்ணீரில் வாடுறேன் எங்கே என் தாய்
எங்கே என்தாய்.. எங்கே என்தாய்
(Both)




No comments:

Post a Comment