எதோஎதோ என்று-தேடி வந்தானே
சாயி இதோஇதோ என்று-பாசம் தந்தானே
வேஷம்கண்டு மனிதன்-என்று எண்ணலாகுமா
அவன் பாசம்-கொண்டு உலகில்-வந்த தெய்வம் தானம்மா
எதோஎதோ என்று-தேடி வந்தானே
சாயி இதோஇதோ என்று-பாசம் தந்தானே
( MUSIC )
அவன் ப்ரேமையுடன் பூமியிலே பிறந்தான்
நமைப் ப்ரேமரூபம் என்றுசொல்லி அழைத்தான்
அவிர்ப் பாகமென த்யாகத்தையே ஏற்பான்
நெகிழ் மனம் புரியும் சேவையிலே களிப்பான்
மனிதன்என்ற போர்வையிலே பவனி வருகிறான்
நமை ஆத்மரூபம் என்றநிலைக்கு உயர்த்தப் பார்க்கிறான்
எதோஎதோ என்று-தேடி வந்தானே
சாயி இதோஇதோ என்று-பாசம் தந்தானே
( MUSIC )
பலமதங்களுமே ஒன்றுஎனும் கல்வி
தனைப் பயிலுவதே மிகச்சிறந்த வேள்வி
இதை அறிந்தபின்னே ஏதுமில்லை போதம்
என உரைத்தது தான் சாயி தந்த வேதம் (2)
எதோ எதோ என்று-தேடி வந்தானே
சாயி இதோஇதோ என்று-பாசம் தந்தானே
( MUSIC )
நல் உயர்வுதரும் மனம்உருகும் சேவை
தன்னை தினம்புரிந்து நடத்தவேண்டும் வாழ்வை
இதே சாயிபிரான் மனம்மகிழும் பூஜை
கண்டு அருளிதரவே அவன்வருவான் நாளை (2)
மனிதன்என்ற போர்வையிலே பவனி வருகிறான்
நமை ஆத்மரூபம் என்றநிலைக்கு உயர்த்தப் பார்க்கிறான்
எதோஎதோ என்று-தேடி வந்தானே
சாயி இதோஇதோ என்று-பாசம் தந்தானே
ஆ..ஆஆஆ...ஓ.ஓஓ
No comments:
Post a Comment