Tuesday, May 19, 2020

293. அன்பே என்றான் (கண்ணன் வந்தான்)***



விருத்தம்
என்பினால் செய்ததில்லை அன்புடலே  சாய்க்கு
கல்லெனக்கும் கசிந்துருகும் அவன்-மனமே பாகு
நாம்-பசித்துப் பொறுப்பானா தான்-ருசித்து உண்பானா
ம்சாயி தன் முழுதும் அன்பே அன்பே

--------------------

அன்பே என்றான் சாயி அன்பே என்றான் 
என்றும் கலங்காதே நானிருக்கேன் கண்ணே என்றான்
(2)
அன்பே என்றான் 
(MUSIC)
  தேடுவதேன் தேவையில்லை  வந்தேன் என்றான் 
தாபம் என்று கொள்வதுமேன் கண்ணே என்றான் 
(2)
கெட்டவர்க்கும் அன்பின்படி அளந்தே நின்றான் 
கேள்விகளே இல்லாமல் தந்தான் என் சாய்
பாசம் என்னும் தேனையூற்றி அன்பைத் தந்தான் 
மாளாத நிலை தோன்ற அருளாய் வந்தான்
அன்பே என்றான் சாயி அன்பே என்றான் அன்பே தந்தான்
அன்பே என்றான் சாயி அன்பே என்றான் 
என்றும் கலங்காதே நானிருக்கேன் கண்ணே என்றான்
அன்பே என்றான்
(MUSIC)
அற்புதங்கள் நடத்துமருள் நீறாய் வரும் 
பூசியதைக் கொள்ளுவோர்க்கு தருமே இதம் 
(2)
நன்கிதனை அருளிச் செய்து தானே கரம் 
கொண்டு சேவை செய்து நின்ற அவனே சிவம்
(2)
குறையாத அன்பளிக்கும் சாயிபாதம்
மலையாக நின்றிருக்க ஏது சோகம் 
சாயி பாதம் சத்ய சாயி பாதம் ..சாயி பாதம்
அன்பே என்றான் சாயி அன்பே என்றான் 
என்றும் கலங்காதே நானிருக்கேன் கண்ணே என்றான்
அன்பே என்றான்
சாய்ராம் ..சாய்ராம் சாய்ராம்
(MUSIC)
கரம் தனிலே அன்புசேவை கொள்ளவேண்டும் 
மனம்உருகி சாயிநாமம் சொல்லவேண்டும்
(2)
பனியெனவே குளிரும் மனம் கொள்ளவேண்டும் 
இதுவல்லவோ சாயிபிரான் தந்த வேதம்
(2)
சேவையினைக் கரம்எடுத்துக் கொள்வோம் நன்றே
நாவிலே சாயிநாமம்  சொல்வோம் இன்றே
(2)
சாய்ராம் (4)
அன்பே என்றான் சாயி அன்பே என்றான் 
என்றும் கலங்காதே நானிருக்கேன் கண்ணே என்றான்
அன்பே என்றான்… அன்பே என்றான் 




No comments:

Post a Comment