கண்ணன் இவன்தான் அந்த ராமன் இவன்தான்
இந்தப் புவிவரும் சாயிபிரான்
இங்கும் இருப்பான் அவன் அங்கும்இருப்பான்
எங்கும் நிறைஇறை சாயிபிரான்
(1+SM+1)
MUSIC
தொல்லை வருமோ அந்தத் துயர் வருமோ
இல்லை எனுமோர் நொந்தச் சொல்லும் வருமோ
(1+SM+1)
முத்து நகையோ அத்திக் கிறை முருகோ
முத்தித் தரும்குருவோ சத்தி..யத்தின்உருவோ
(1+SM+1)
மண்ணில் பெரும்-பேர் எழில் கொண்டு-ஒருதேர் என்று
தன்னில்-வருவான் சாயி என்னும் பெருமான்
கண்ணன் இவன்தான் அந்த ராமன் இவன்தான்
இந்தப் புவிவரும் சாயிபிரான்
இங்கும் இருப்பான் அவன் அங்கும்இருப்பான்
எங்கும் நிறைஇறை சாயிபிரான்
(BOTH)
(MUSIC)
கண்ணில் குறும்போ அவன் நெஞ்சில் வெளுப்போ
என்று சிரிப்பான் மண்ணில் வந்து நடிப்பான்
(1+SM+1)
வட்டப் பிறையோ அன்பு பட்டநிறையோ
சாயி பண்பின் துறையோ மண்ணில்வந்த இறையோ
விண்ணை அளந்தான் அன்பில் மண்ணை அளந்தான்
பிள்ளை நெஞ்சின் உளத்தால் எங்கள் நெஞ்சம் நிறைந்தான்
கண்ணன் இவன்தான் அந்த ராமன் இவன்தான்
இந்தப் புவிவரும் சாயிபிரான்
இங்கும் இருப்பான் அவன் அங்கும்இருப்பான்
எங்கும் நிறைஇறை சாயிபிரான்
(MUSIC)
ஆ..ஆ.
அன்பில்-வரும்-நீ..றவன் கையில்வருமே
தொல்லைகளையே கொன்று நன்மை தருமே (2)
சேவைஎனத்-தான் அன்பின் பாதை-வகுத்தான்
அந்தகீதை எனத்தான் அதைச் சொல்லிக் கொடுத்தான்
அதைச் சொல்லிக் கொடுத்தான்
அன்பைத்தருவோம் அதில் பண்பைப்பெறுவோம்-வினை என்னும்-மதில்ஓர் தடை தன்னைக்கடப்போம்
கண்ணன் இவன்தான் அந்த ராமன் இவன்தான்
இந்தப் புவிவரும் சாயிபிரான்
இங்கும் இருப்பான் அவன் அங்கும்இருப்பான்
எங்கும் நிறைஇறை சாயிபிரான்
(BOTH)
No comments:
Post a Comment