உண்ணும்உணவே எண்ணும்நினைவே சாயிதானடா (2)
நாம் காணும்உலகில் தோன்றுவதெல்லாம்
சாயிதானடா சத்ய சாயிதானடா
(SM)
உண்ணும்உணவே எண்ணும்நினைவே சாயிதானடா
(MUSIC)
நாளும்உதவணும் நெஞ்சில்உருகணும் அதுதாண்டாமகிழ்ச்சி (2)
அந்த
சாயிதெய்வம் உலகவதரித்து செய்ததுதிருவாய் மலர்ச்சி (2)
நாளும் நாமும் செய்திட வேணும் சேவைஎனும் முயற்சி
நல்நினைவோடு-நாம் சொல்லிப் பழகணும் சாயிநாமப் பயிற்சி
உண்ணும்உணவே எண்ணும்நினைவே சாயிதானடா
(MUSIC)
மனிதனாக வந்தநம்சாயி தெய்வம்தானடா சாயி தெய்வம்தானடா
வளையவரும் உருவமில்லே-அது-
மெய்யின் மெய்யடா சாயி மெய்யின் மெய்யடா
தரிசனத்தில் வினைகளும்-மாயச் செய்துஉய்யடா நீ செய்து உய்யடா (2)
பாகாய்மாறி கனியும்-நெஞ்சம் உருகும்-நெய்யடா சாயி உருகும் நெய்யடா
உண்ணும்உணவே எண்ணும்நினைவே சாயிதானடா
(MUSIC)
ஏப்பம்வர அன்பினைத்தின்னு ஏன்கொஞ்சம்? தின்னு-இன்னும் ...
ஏப்பம்வர அன்பினைத்தின்னு ஏன்கொஞ்சம்? தின்னு-இன்னும்
எனச்சொல்லித் தாயுருவாக அன்பு தந்தாரு சாயி
பாசத்தைக் குறைஞ்சிடாமல் அள்ளித்தந்தாரு
காலை மாலை தரிசனத்தைக் காணவந்த பெரும்ஜனத்தை (2)
வேடிக்கை யாகப்பேசி நீறளிப்பாரு சாயி
நாட்டுக்கேஓர் தந்தை என்றே இருந்து வந்தாரு ஆம் இருந்து வந்தாரு
உண்ணும்உணவே எண்ணும்நினைவே சாயிதானடா
No comments:
Post a Comment