Friday, May 15, 2020

253. பாரப்பா சாயீசா (யாரைத்தான் நம்புவதோ) **




பாரப்பா சாயீசா வினையைக் கொஞ்சம்
அம்மாம்மா எண்ணிடவே நெஞ்சம்அஞ்சும்
உன்பாதம் நிழலாகும் பிறயாவும் நகலாகும்
பாரப்பா சாயீசா வினையைக்  கொஞ்சம்
(MUSIC)
பாரைக்-காக்க வாசாயி உன்னை-விட்டால் யார்சாயி
நானும்-வாடி பலியாகாமல் நாட்டில்-வாழும் படிவாயேன் 
மண்ணில்-வந்தாய் அன்பென்று அதனால்தானே உயர்வன்று
கண்ணில்-தெரிய சாயிபிரானே மண்ணில்-வந்தால் ஆகாதோ
ஓ .. ஓ.. ஓ
 பாரப்பா சாயீசா வினையைக் கொஞ்சம்
அம்மாம்மா எண்ணிடவே நெஞ்சம்அஞ்சும்
(MUSIC)
உலகைக் காக்கும் பாபாநீ உலவிக்காட்டக் கூடாதோ
அருளின்வாக்கை உழலும்சேயைப் பார்த்துச்சொல்லக் கூடாதோ 
பாருன்கையில் தினமுண்டு வாழும்வகையில் தினம்தந்து
கொஞ்சும்தாயாய் உன்னுருவல்லால் -  
மனிதரிலிங்கே எவருண்டு 
ஓ .. ஓ.. ஓ
பாரப்பா சாயீசா வினையைக் கொஞ்சம்
அம்மாம்மா எண்ணிடவே நெஞ்சம்அஞ்சும்
உன்பாதம் நிழலாகும் பிறயாவும் நகலாகும் (2)









No comments:

Post a Comment