Saturday, May 9, 2020

205. தர்மம் தனைக் காக்கும் (தருமம் தலை காக்கும்) **



 தர்மம் தனைக்காக்கும் எங்கள்சாயிராம் இறையாகும்
மானிடஉருவில் அவதரித்தேஇந்த உலகத்தைக் காத்துநிற்கும்..
 நல்ல தர்மம் தனைக்காக்கும் எங்கள்சாயிராம் இறையாகும்
(MUSIC)
தலைமேலே கரும்குடைபோலேகவின்சிகைமுடி விரிந்திருக்கும்(2)
நம்மைவாடவிடாதவன் பர்த்தியில்தினம்தரும் தரிசனம்கோடிபெறும்(2)  
நல்ல தர்மம் தனைக்காக்கும் எங்கள்சாயிராம் இறையாகும்
(MUSIC)
 அள்ளிக்கொடுக்கும் பாசத்திலேஅவன்-தாயல்லவோ-நமக்கு (2)
வாழ்வில்நல்வழிதந்தே வல்வினைபோக்கும் தந்தையன்றோ-உயிர்க்கு(2) 
என்றும் தர்மம் தனைக்காக்கும் எங்கள்சாயிராம் இறையாகும்
மானிடஉருவில் அவதரித்தேஇந்த உலகத்தைக் காத்துநிற்கும்
 நல்ல தர்மம்தனைக்காக்கும் எங்கள்சாயிராம் இறையாகும்








No comments:

Post a Comment