ஒவ்வொரு-யுகத்திலும் உலகில்நிகழ்வது சாயிஉன் அவதாரம்
இறைவா அருள்தரும்-உன்பாதம்
ஒவ்வொரு-யுகத்திலும் உலகில்நிகழ்வது சாயிஉன் அவதாரம்
இறைவா அருள்தரும்-உன்பாதம்
நீயே அன்னை நீறிடும் உன்கை மக்களின் துயர் போக்கும்
நாளும்நடந்து தரிசனம் தந்தே பக்தரைக் களிப்பாக்கும்
கேளிக்..கையிலோர் உவப்புமிகுந்து வாழ்வது பிசகாகும்
மாயம் அதனைப் போக்கிடும் ஞானம் தருமுன் அருளாகும்
ஒவ்வொரு-யுகத்திலும் உலகில்நிகழ்வது சாயிஉன்அவதாரம்
இறைவா அருள்தரும்-உன்பாதம்
(MUSIC)
புகல்வேண்டும்போ..து பதம்தந்தசா..யி
பயம்வந்தபோ..து துணைவந்த தா..யே
இருள்போக்கும்அன்பு விளக்கேநீசாயி
எதிர்நோக்கும்பூமி உன்தோற்றம் -ஸ்வாமி
ப்ரேமவடிவிலே மீண்டும்திரும்புவேன் என்பதுன் மொழியாகும்
மண்ணில்நீவர நீரைப் பெருக்குது எங்களின் விழியாகும்
ஒவ்வொரு-யுகத்திலும் உலகில்நிகழ்வது சாயிஉன்அவதாரம்
இறைவா அருள்தரும்-உன்பாதம்
(MUSIC)
அருள்உண்ட-நாங்கள் பொருள்-வேண்டவில்லை
உன்பாதம் வேண்டி இமைமூடவில்லை
தினம் எங்கள்நாவில் இசைக்கின்ற கீதம்
அழைக்காதோஉன்னை மண்ணில் வந்துசேர
தினம்தினம் அழுகையில் மனம்படும்துயரினில்
வாடிடு முந்..தன்பிள்..ளை
நீவரவென்றே ஏங்கிடும்இதயம் துடிப்பது பெரியதொல்லை
ஒவ்வொரு யுகத்திலும் உலகில்நிகழ்வது சாயிஉன் அவதாரம்
இறைவா அருள்தரும் உன்பாதம்
No comments:
Post a Comment