Saturday, April 29, 2017

88. உலகுக்கு அன்பால் வந்தவன் சாயி ( நிலவுக்கு என்மேல் )***




உலகுக்கு அன்பால் வந்தவன்சாயி அவனே இறைவனடி
கொண்ட உடலுக்குமனித-வேஷமேயன்றி-உண்மையில் இல்லையடி  
(2)
கனிமொழிபேசி அன்பினைத் தந்தான் அவனோர் அன்னையடி
அந்த கடலுக்குமுண்டு எல்லைக ளவன்திரு அருளுக்கு இல்லையடி
(Very Short Flute)
உலகுக்கு அன்பால் வந்தவன்சாயி அவனே இறைவனடி
கொண்ட உடலுக்குமனித வேஷமேயன்றி உண்மையில் இல்லையடி
(Music)
சங்..கல்..பத்தாலே உலகம்வந்தானே சிறப்பினில் தானடியோ(2)
உந்தன் சிறுமதிகொண்டு அவனைஎண்ணாதே மனிதனாய் நீயடியோ
(Very Short Flute)
உயிர்விடும் நாளில் மனத்திரைமீது கண்டிடு அவன்தாளை
உந்தன் ஊழ்வினைபோக்கி உயர்த்திடுவோனே சாயிபிரான் தானே(SM)  
உலகுக்கு அன்பால் வந்தவன்சாயி அவனே இறைவனடி
கொண்ட உடலுக்குமனித வேஷமேயன்றி உண்மையில் இல்லையடி
(Music)
செத்திடும்உடலே இருந்திடும்உயிரே நன்கிதை உணர்ந்துவிடு.. ஆ..ஆ.
செத்திடும்உடலே இருந்திடும்உயிரே நன்கிதை உணர்ந்துவிடு
சாயி சொன்னது போலே உயரினை ஆன்ம ரூபமாய் எண்ணிவிடு (2)
 உலகுக்கு அன்பால் வந்தவன் சாயி அவனே இறைவனடி
கொண்ட உடலுக்குமனித வேஷமேயன்றி உண்மையில் இல்லையடி
கனிமொழிபேசி அன்பினைத் தந்தான் அவனோர் அன்னையடி
அந்த கடலுக்குமுண்டு எல்லைக ளவன்திரு அருளுக்கு இல்லையடி
உலகுக்கு அன்பால் வந்தவன்சாயி அவனே இறைவனடி
கொண்ட உடலுக்குமனித வேஷமேயன்றி உண்மையில் இல்லையடி
உண்மையில் இல்லையடி



No comments:

Post a Comment