Monday, June 5, 2023

632.சாயி பெருமா(நாளை நமதே)**


அன்பு வடிவிலே
இந்த உலகிலே
நீயே வந்தாய்
இங்கு நீயே வந்தாய்
ப்ரேமை எளிதிலே
VSM
கிடைக்கும் வகையிலே
VSM
நீயே தந்தாய்
எங்கள் சாயி தந்தாய்
தாய் தந்தை ரெண்டும்
ப்ரேமையின் வடிவாய்
ஓர் உருக் கொண்டு
பாரினில் வந்தாய் நீயே இறைவா...
கலியுகம் என்னும் இருட்டினில் ஒளிர்ந்து
பாதையைக் காட்டும் குருவென வந்தாய் சாயி பெருமா
சாயி பெருமா.. சாயி பெருமா..
(இசை)
சாயி பெருமா.. சாயி பெருமா..
சாயி பெருமா.. சத்ய சாயி பெருமா
(இசை)
பாசம் என்னும் ஊற்றினைக் காட்டும் உந்தன் விழி காட்டும்
நீயும் அன்பாய் மொழிந்தது தானே வாழ வழி காட்டும்
(2)
நேற்றும் நீயே ஷிரடி பிரானே
இன்றும் நீயே சத்திய சாயி
(2)
வந்திடாய் விரைவினில் ப்ரேம சாயி வாராயோ (2)
சாயி பெருமா... சாயி பெருமா.. (2)
(இசை)
பாரிலெங்கும் பூஜையில் உள்ள உன் படம் தன்னிலே
உந்தன் அருளைத் திரு நீறாக தந்த ஆண்டவனே
(2)
நாவில் கடவுள் பேரினைச் சொல்லு
பேதம் என்னும் தீமையைத் தள்ளு
(2)
என்று நீ சொன்னது நெஞ்சை விட்டு நீங்காது (2)
சாயி பெருமா... சாயி பெருமா.. (2)
தாய் தந்தை ரெண்டும்
ப்ரேமையின் வடிவாய்
ஓர் உருக் கொண்டு
பாரினில் வந்தாய் நீயே இறைவா...
கலியுகம் என்னும் இருட்டினில் ஒளிர்ந்து
பாதையைக் காட்டும் குருவென வந்தாய் சாயி பெருமா
சாயி பெருமா.. சாயி பெருமா..
சாயி பெருமா.. சத்ய சாயி பெருமா..







No comments:

Post a Comment