Sunday, May 7, 2023

624.கூறத் தகுந்த பெயர் சாயிராம்(ஆடப் பிறந்தவளே ஆடி வா)


ஆயிரம் பிறவி எடுத்த-பின்னாலும் தொடர்-வினை விடுவதில்லை

ஆயினும்-சாயி நாமமொன்றாலே அவை-நமைத் தொடுவதில்லை

சாயிராம் சாயிராம் சாயிராம் (2)

_________________________________________________________________

கூறத் தகுந்த பெயர் சாயிராம்
மனம் தேறற்க்குகந்த பெயர் சாயிராம்
சாயிராம் சாயிராம் சாயிராம்
(2)
(MUSIC)
இடையூறு வரும்-வேளை சொல் சாயிராம்
குழல் இசை-போலத் தேனூறும் பெயர் சாயிராம்
(2)
கடல்-தாண்ட அனுமானின் துணை சாயிராம் (2)
வெந்தணலை-நீர் போலாக்கும் மழை சாயிராம்….
சாயிராம் சாயிராம் சாயிராம் 
கூறத் தகுந்த பெயர் சாயிராம்
மனம் தேறற்க்குகந்த பெயர் சாயிராம்
சாயிராம் சாயிராம் சாயிராம்
(MUSIC)
புயலான துன்பத்தைத் தூசாக்குமாம்
யார் உரைத்தாலும் பலன்-கூட்டும் பெயர் சாயிராம்
(2)
இரண்டெழுத்தில் நால்வேதப் பொருள் சாயிராம் (2) 
அந்த மறைஞானப் பொருள் தன்னை வா-சொல்ல வா
சாயிராம் சாயிராம் சாயிராம் 
(MUSIC)
 கல்லுக்கும் உயிர்-தந்த பெயர் சாயிராம்
எந்த சொல்லுக்கும் ஒலி-மூலமாம் சாயிராம்
(2)
அணுவிற்குள் அணுவான அணு-சாயிராம் (2)
எந்தன் வார்த்தைக்கும் உயிரூட்டம் தரும் சாயிராம்
சாயிராம் சாயிராம் சாயிராம்
கூறத் தகுந்த பெயர் சாயிராம் 
மனம் தேறற்க்குகந்த பெயர் சாயிராம்
சாயிராம் சாயிராம் சாயிராம் (2)
கூறத் தகுந்த பெயர் சாயிராம்
மனம் தேறற்க்குகந்த பெயர் சாயிராம்
சாயிராம் சாயிராம் சாயிராம் (2)



Other SONGS Recorded

முதல் பக்கம் 



No comments:

Post a Comment