Saturday, March 11, 2023

613.பார்வை அருள் ப்ரேமை ஆறாகிடும்(பார்வை யுவராணி கண்ணோவியம்) **




 பார்வை அருள் ப்ரேமை ஆறாகிடும் 
பாசம் தருகின்ற தாய் ஆயிரம்
சேவை எனும் சாயி திருவாய் வரும்
இதுதான் நாம் கொள்ள திருமந்திரம்
பார்வை அருள் ப்ரேமை ஆறாகிடும் 
பாசம் தருகின்ற தாய் ஆயிரம்
(MUSIC)
யாரென்ன தந்தாலும் தேனென்று தந்தாலும் 
உன்-பேச்சுக்கீடாகுமோ
(SM)
யாரென்ன தந்தாலும் தேனென்று தந்தாலும்
உன்-பேச்சுக்கீடாகுமோ
யாரிங்கு வந்தாலும் பொன்-கோடி தந்தாலும்
உன் ப்ரேமை போலாகுமோ
  எந்த நாளும் சளைக்காது  கண்-தேடிடும் 
உந்தன்-பாதம் வரும்-பாதை தனை-நோக்கிடும்
 பார்வை அருள் ப்ரேமை ஆறாகிடும் 
பாசம் தருகின்ற தாய் ஆயிரம்
(MUSIC)
கால்வண்ணம் அங்கென்று கைவண்ணம் இங்கென்று கவிகம்பன் பண்பாடுமே
(SM)
கால்வண்ணம் அங்கென்று கைவண்ணம் இங்கென்று
கவிகம்பன் பண்பாடுமே
மால்வண்ணம் என்றாகும் ஸ்ரீராமன் திருமேனி  
தனை-அந்த கவிசொல்லுமே
உன்னைப் பாட கவிகம்பர் எதைக்கூறுவார்
உந்தன்-மேனி அணுவுள்ளும் அன்பே என்பார்
 பார்வை அருள் ப்ரேமை ஆறாகிடும் 
பாசம் தருகின்ற தாய் ஆயிரம்
(MUSIC)
உன்-லீலை இழையோட என்-பாட்டில் உனைப்-பாட
யுகம்-யாவும் போதாதையா
நீ-தந்த அன்பாற்றில் யார்-ஆடிக்-களித்தாலும்
யுகம்-போதல் தெரியாதையா
என்-வேள்வி உனைப் பற்றி பண்-செய்வதே
அதன்-மூலம் எந்நாளும் பணி-செய்வதே 
 பார்வை அருள் ப்ரேமை ஆறாகிடும் 
பாசம் தருகின்ற தாய் ஆயிரம்
சேவை எனும் சாயி திருவாய் வரும்
இதுதான் நாம் கொள்ள திருமந்திரம்
பார்வை அருள் ப்ரேமை ஆறாகிடும் ..


 Other SONGS Recorded


No comments:

Post a Comment