Sunday, May 31, 2020

487. வந்தானே போனானே (போகாதே போகாதே என் கணவா)



வந்தானே போனானே ஓர்-கனவாய்

என்சாயி போனானே ஓர்-கனவாய்

சொல்லாமல் போனானே என் சாயிராம்

 

இலவை-நான் பூவென்று நம்பி-வந்தேன் அது-ஓர் -

கனியாகக் கிளியாகக் காத்திருந்தேன் 

இலவைக் கிளியாகக் காத்தே-நான் வாழ்ந்து வந்தேன்

ஆசை-ஆ..சையாய்-நான் கனவு-கண்டேன்

சாயி-உன் வாக்கை-நான் நம்பி-வந்தேன்

தொண்ணூற்று நான்குந்தன் இருப்பென்று நம்பி வந்தேன்

(MUSIC)

பாழும்-என் மனதென்று தெளியும் என்றே... ஹே சாயிராம்

பாழும்-என் மனதென்று தெளியும் என்றே

நான் பைத்தியம் போல்- வாடி அழுதும் நின்றேன்

நாளும்-நான் சாயி-உன் பேரைக் கொண்டே-சோக கீதத்தைப் பாடியே வாடு..கின்றேன்

சாயி கீதத்தைப் பாடியே வாடுகின்றேன்

(MUSIC)

ஐயோ-உன் நெஞ்சென்ன கல்லோ அப்பா 

இல்லை உன்-செவி நன்றாய் அடச்சிருச்சா 

சாயி உன்-செவி நன்றாய் அடச்சிருச்சா

பாட்டில் வரும்-சோகம் தெரியல்லையா-நீயுன்

பாட்டில்-இ..ருப்பதும் முறையா ஐய்யா

நீயுன் பாட்டில்-இ..ருப்பதும் முறையா ஐய்யா

வந்தானே போனானே ஓர்-கனவாய்

என்சாயி போனானே ஓர்-கனவாய்

சொல்லாமல் போனானே என் சாயிராம்



No comments:

Post a Comment