Sunday, May 31, 2020

485. நல்ல நல்ல விதம் நமக்கு(நல்ல நல்ல நிலம் பார்த்து) **



நல்ல-நல்ல விதம்-நமக்கு நாளும்-படிப்..பினை-தந்தான்

சாயிபிரான் உலகத்துக்கே அன்பளித்தான் தந்தையாய்

(2)

முன்னர் சென்ற-யுகங்களிலே ராமபிரான் சாயிராம்

கண்ணபிரான் அவன்-உருவே சாயி பிரான் இறைவனே

(MUSIC)

தன்னையல்ல நம்-நலத்தை மட்டும்-மனம் நினைத்து

கால-நேரம் பார்க்காது அன்பு-மழை பொழிந்து

அன்னை-தந்தை ஆய்-நமக்கு எல்லாமும் கொடுத்து

நல்வழியைக் காட்டி-அன்பு சேவை-சொல்லிக்கொடுத்து

இடர்களைந்து இதயத்திலே இன்பமழை பொழிந்துமே

பொல்லாதார் வாழ்க்கையினை மாற்றியவன் சாயிராம்

நல்ல-நல்ல விதம்-நமக்கு நாளும் படிப்பினை தந்தான்

சாயிபிரான் உலகத்துக்கே அன்பளித்தான் தந்தையாய்

(MUSIC)

பார்புகழும் சேவை-தன்னை நம்-மனத்தில் விதைத்து

நம்ம..றிவு வளர்ந்..திடக் கல்விச்சாலை கொடுத்து

(2)

நோய்விலக்க மருந்தகத்தை நல்லபடி அமைத்து

 நீர்வளமும் பெருகிடச் சாயி-கங்கை சுரந்து

பெற்றவரைப்..போல்-உலகைக் காத்தவனே சாயிராம்

சாயிபிரான் மனிதனல்ல அந்த-ஆண்டவனே அறிந்திடாய்

(SM)

நல்ல நல்ல விதம்-நமக்கு நாளும் படிப்பினை தந்தான்

சாயி பிரான் உலகத்துக்கே அன்பளித்தான் தந்தையாய்

அன்புத் தந்தை சாயிராம்



No comments:

Post a Comment