Sunday, May 31, 2020

484. ஆடலுக்குச் சிவன்-உண்டு(காவலுக்கு வேலுண்டு)





ஆடலுக்குச் சிவன்-உண்டு பாடலுக்குத் தமிழ்-உண்டு 
உந்தனுக்கு நிகரேதடா சாயிராம் உனக்கு-நிகர் நீ தானடா
(2)
(MUSIC)
அனு-தினம்-நீ நடந்து-பெரும் அற்புதமாய்க் காட்சிதரும்
தரிசனம் கண்டேனடா (1+SM+1)
என்றும் கண்-விட்டு அகலாதடா
ஓம்-சாய்ராம் ஓம்-சாய்ராம் என்று-பெரும் பக்தர்-குழாம் 
தொழுதிடக் கண்டேனடா அந்த அழகுக்கு-ஈடேதடா     
ஆடலுக்குச் சிவன்உண்டு பாடலுக்குத் தமிழ்உண்டு 
உந்தனுக்கு நிகரேதடா சாயிராம் உனக்கு-நிகர் நீதானடா 
(MUSIC)
என்று-மீண்டும் எந்தன் கண்காணும்
தினம்-கிட்டாதா என்று-ஏங்கி ஆனந்தப்-பண்பாடும்
அட அடாடா என்று வியந்து வியந்து-பண் பாடும் 
(MUSIC)
சாலமக..ளோடெருக்..கணிந்துனைக் கண்டதனாலே
சிவனுரு-அன்புரு என-சம்..மந்..தர்-சொன்னாரே
 (1+SM+1+SM)
இரண்டுக்கும் இடையிலோர் பேதமிலாத-ஓர் 
அந்த-சிவன்-அம்சம்-கொண்டாய்நீ  
பார்-வந்..தாயே ஸ்ரீ-ஹ..ரி-போலும் நின்றாயே
ஓம் ஸ்ரீ சாயி நீ அந்த ப்ரம்மனும் தானே
ஆடலுக்குச் சிவன்உண்டு பாடலுக்குத் தமிழ்உண்டு 
உந்தனுக்கு நிகரேதடா சாயிராம் உனக்கு-நிகர் நீதானடா 
(MUSIC)
ஆதி-மூலமும் அந்தமும்-நீ இகம்-நீ பரம்நீ சகலமும்-நீ
உலகுறை மனிதரின் மனங்களிலே சுடராய் ஒளிரும் ஆன்மா நீ
ஆன்மா நீ பரமான்மா நீ (2) + (SM)
ஆட்டுவிப்பாய் நீயல்லவோ ஆடுவதும் நானல்லவோ 
பாடுவதும் நானல்லடா-என்சாயிராம் அத்திறமும் எனக்கேதடா+ (SM) 
என்-பாடல் உன்-பாடல் தான் சாயி
உந்தன் கரம்-தன்னில் வெறும்-கருவி நான் சாயி




No comments:

Post a Comment