Sunday, May 31, 2020

461. துன்பம் விலக (குலுங்கக் குலுங்கச் சிரிக்கும் சிரிப்பில்)

துன்பம்-விலக துயரம்-விலக உரைத்திடு நாமம்

இன்பம்-பெருக இதயம்-விளங்க இசைத்திடு கீதம்

(2)

பவ-மருந்தாகும் சாயிநாமம் செவி-விருந்தாகும் சாயிகீதம் (2)

(MUSIC)

சொன்னால்-நாமம் பண்ணால்-கீதம் அதனால்-போகும் பாபம்

பண்பாய்-கீதம் பண்ணால்-என்ன அதன்-மேல் உங்கள்-கோபம்

(2)

சாயி-நாமத்திலும் சாயி-கீதத்திலும் கருவே சாய்ராம்-போதம்

உருகி-நாமம்-சொல்லி இசைக்கும்-கீதப்-பண்ணில் -

பணிவோமே அவன்-பாதம்

பவ-மருந்தாகும் சாயிநாமம் செவி-விருந்தாகும் சாயிகீதம் (2)

துன்பம்-விலக துயரம்-விலக உரைத்திடு நாமம்

இன்பம்-பெருக இதயம்-விளங்க இசைத்திடு கீதம்

(MUSIC)

எங்கள் ஸ்வாமி-சொல்லே என்றும்-நாமம் தன்னில்-துள்ளும்

கீதம் கூட-இதையே நல்ல-இசையைக் கூட்டிச்-சொல்லும்

(2)

 கல்லைக் கட்டி-கடல் வீசி..னாலுமெனை நாமம்-ஒன்றே காக்கும்

என்ற-நாவரசர் கீதம்-இசைத்தாரே அதுதானே-தே..வாரம்

பவ-மருந்தாகும் சாயிநாமம் செவி-விருந்தாகும் சாயிகீதம் (2)

துன்பம்-விலக துயரம்-விலக உரைத்திடு நாமம்

இன்பம்-பெருக இதயம்-விளங்க இசைத்திடு கீதம்

ஓம்-சாய்ராம் ஜெய்-ஓம்-சாய்ராம் ஜெய்-சாய்ராம் ஓம்-ஜெய் சாய்ராம் (2)

No comments:

Post a Comment