Sunday, May 31, 2020

452. பத்துப் பாட்டு(பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா)



பத்துப் பாட்டு இல்லை இது சாயிமா

இதில் இலக்கணத்தை எதிர் பார்த்தல் ஞாயமா

(2)
நான் கற்றுத் தெளிந்து எழுதுவதும் ஆகுமா

எனக்கு தைரியத்தை நீ தருவாய் சாயிமா

(2)

பத்துப் பாட்டு இல்லை இது சாயிராம்

இதில் இலக்கணத்தை எதிர் பார்த்தல் ஞாயமா

கண்டதை எழுதவில்லை சாயீசா

உன்னில்-நான் கண்டதைத்தான் எழுதுகிறேன் ப்ரேமேசா

(2)

சண்டை-சச்சரவு-இதில் ஏனைய்யா

இது பாட்டில்லே என்-பாடு தானைய்யா

(2)

ஆலிலை-மேல் ஆடும்-கண்ணன் நீ தானே

சாம்பல் பூசும்-பரம சிவபெருமான் நீதானே

(2)

கை சுரந்த-நீறை வந்தளித்தாய் நீ-தானே   

மண்ணை மாற்றிப் பொன்னாய் ஆக்கிடவென்..றே-தானே

(2)

பத்துப் பாட்டு இல்லை இது சாயிமா

இதில் இலக்கணத்தை எதிர் பார்த்தல் ஞாயமா

  (MUSIC)

சின்னக்காலை எடுத்து நீயும் வந்தாக்கா

அழகு அன்னம்-போல நடந்ததைக்கண் கண்டாக்கா

(2)

 எந்தன் நெஞ்சம் பறிகொடுத்தேன் என் தப்பா

உடனே சொல்ல-நானும் எழுதி வச்சேன் எந்தன்-பா

(2)

கண்டதை எழுதவில்லை சாயீசா

உன்னில்-நான் கண்டதைத்தான் எழுதுகிறேன் ப்ரேமேசா

சண்டை-சச்சரவு-இதில் ஏனைய்யா

இது பாட்டில்லே என்-பாடு தானைய்யா

பத்துப் பாட்டு இல்லை இது சாயிமா

இதில் இலக்கணத்தை எதிர் பார்த்தல் ஞாயமா



No comments:

Post a Comment