Saturday, May 30, 2020

378. மக்கள் சோகம் போக்குற (கெட்டி மேளம் கொட்டுற )




மக்கள் சோகம் போக்குற சாயீசன்
நம்மை ஏனென்னு கேக்குற சாயீசன்
பூ இதயம் ஆகிற சாயீசன்
வந்து விட்டானுலகில் சாயீசன் (2)
(1+SM+1)
(MUSIC)
பர்த்தியிலே இருந்து அதிலே பாரை-வரவழைச்சு (2)
நீறை உதிரவச்சு அதிலே நெஞ்சம் நெறையவச்சு (2) 
கோவிலில்-இல்லை மக்களின் மத்தியில் தெய்வம் இருந்ததைய்யா 
அன்புச்சேவை-புரிந்தது மானிடனாய்ப்-புவி வந்து-நடந்ததய்யா
அன்புப் பாலூட்டிடும் சீராட்டிடும் தாயாகுமெங்கள்-சாயீசன் (2)
எங்கள் ஆயி-அப்பன் சாயீசன் சொந்தமா..யிருப்பவன் சாயீசன்
(SM)
மக்கள் சோகம் போக்குற சாயீசன் நம்மைஏனென்னு கேக்குற சாயீசன்
பூ இதயம் ஆகிற சாயீசன்
வந்து விட்டானுலகில் சாயீசன் (2)
(MUSIC)
நீறினைப் பூசிக்கிட்டு வாயிலே நாமத்தைச் சொல்லிக்கிட்டு
சேவை புரிஞ்சுக்கிட்டு சாயிராம் சொன்னதைச் செஞ்சுக்கிட்டு
பண்பில் சிறந்தவர் சாயி பக்தரென பெயரெடுப்போமா
இவர் போல-இருக்கணும் நாமும்என்றுபிறர் சொல்லிட வைப்போமா   
அன்புச்சேவை செய்வோம் நாமம்சொல்வோம் எந்நாளும்நாம் எந்நாளும்
அன்புச்சேவை செய்வோம் எந்நாளும் அவன்பேரைச்சொல்வோம் எந்நாளும்
(MUSIC)
விட்டுவிலகும்வினை தூய்மை யாகுமுன்-நெஞ்சமடி 
கட்டுக்கடங்கமால் உலவும் மனமடங்குமடி 
பாடித்துதித்திடும் சாயிகீதத்திலே யாவும்-நடக்குமடி 
அந்தசாயி..ராமன்பதம் வந்து-நடந்திட வேளை-பிறக்குமடி  
வந்து-ஒளிகொடுக்கும் வழிகொடுக்கும் சாயீசனின் பொற்பாதம் (2)
அந்த சாயீசனின் பொற்பாதம் ப்ரேம சாயீசனின் பொற்பாதம்





No comments:

Post a Comment