Friday, May 29, 2020

327. இறைவன் சாயிராம் (கொடி அசைந்ததும்) **



இறைவன்-சாயிராம் மனிதன்-என்பதா

மனிதன்-சாயிராம் இறைவன் என்பதா

இறைவன் என்பதால் அருள் சுரந்ததா

அருள் சுரந்ததால் இறைவன் என்பதா

இறைவன்-சாயிராம் மனிதன்-என்பதா மனிதன்-சாயிராம் இறைவன் என்பதா

(MUSIC)

 அன்பு தந்ததால்அன்னை ஆனதா

அன்னை ஆனதால் அன்பு தந்ததா

பாவம் சென்றதால் இறைவன் என்பதா

இறைவன் என்பதால் பாவம் சென்றதா

நீறு வந்திட கை சுழன்றதா

கை சுழன்றிட நீறு வந்ததா

உருவம் கொள்ளத் தான் மனிதன் ஆனதா

மனிதன் ஆனதால் உருவம் கொண்டதா

இறைவன்-சாயிராம் மனிதன்-என்பதா மனிதன்-சாயிராம் இறைவன் என்பதா

(MUSIC)

நீறை உண்டதால் நோய் பறந்ததா 

நீறை உண்ணத்தான் நோய் பிறந்ததா

அன்பைத் தந்ததால் சாயி என்பதா

சாயி என்பதால் அன்பைத் தந்ததா

சாயிகீதமும் சாயிநாமும்

கூடிச்-சொல்லுவோம் ஆடிப் பாடுவோம்

கருணை காட்டத்தாய் உருவைக் கொண்டுதான்

உலகை நாடுவான்  விரைவில் சாயிராம்

இறைவன்-சாயிராம் மனிதன்-என்பதா

மனிதன்-சாயிராம் இறைவன் என்பதா

இறைவன் என்பதால் அருள் சுரந்ததா

அருள் சுரந்ததால் இறைவன் என்பதா

சாயிராம-ராம்.. சாயிராம-ராம் (2) 



No comments:

Post a Comment