சேவை புரிந்திடு நன்கு
அன்பு தனை-மனம்தனில் கொண்டு
சாயி புகன்றனன் அன்று
வேதம் நமக்கது இன்று
(2)
(MUSIC)
நான்தான் உலகில் எனக்கே எதுவும் என்றிட வாழ்ந்தாரே
(1+sm+1)
இரக்கமில்லாமல் சுயநலத்தோடே மாந்தரும் வாழ்ந்தாரே
என்பதைமாற்றி பண்பினை-ஊட்டி மாற்றம் புரிந்திட மண்வந்து
கனிந்த அன்பைக் கொடுக்கசாயி தவிர-வேறே யாருண்டு
சேவை புரிந்திடு நன்கு
அன்பு தனை-மனம்தனில் கொண்டு
சாயி புகன்றனன் அன்று
வேதம் நமக்கது இன்று
(MUSIC)
கானத்தைப்பாடி சா..யிபிரானை திரும்பிட அழைப்போமா
(1+SM+1)
மாண்பு கொடுக்கும் சேவையைப் புரிந்து உலகினில் உழைப்போமா
அனுதினம்-நாமும் உருகிப்பாடும் சாயிகீதத்தின் பலன்என்று
சாயிபகவான் மனமும்கரைந்து மீண்டும்வருவார் உருக்கொண்டு
சேவை புரிந்திடு நன்கு
அன்பு தனை-மனம்தனில் கொண்டு
சாயி புகன்றனன் அன்று
வேதம் நமக்கது இன்று
(MUSIC)
உலகினில் வாழும் மனிதர்யாவரும் ப்ரேமையின் வடிவாகும்
(1+SM+1)
இதுதெரியாமல் உனை மறந்தாயே இறைவனின் உருநீயே
என்றுசாயி சொல்லிநாட்டில் ஞானம் தந்தார் அன்புடனே
இந்தஉலகம் வந்துஉருவம் கொண்டுஇருந்தார் நம்முடனே
சேவை புரிந்திடு நன்கு
அன்பு தனை-மனம்தனில் கொண்டு
சாயி புகன்றனன் அன்று
வேதம் நமக்கது இன்று
No comments:
Post a Comment