Sunday, May 17, 2020

271. என்றும் உறங்கிடும் (தென்றல் உறங்கிய போதும்) **



என்றும்உறங்கிடும் நெஞ்சம் இன்னும்உறங்கிட அஞ்சும்
சாயி பிறந்துவிட்டான் இன்று சாயிபிறந்துவிட்டான் 
எங்கள் சாயி பிறந்துவிட்டான்
(2) 
(SM)
வந்து வழங்கிட என்றும் உலகை நாடித்தஞ்சம்
சாயி பிறந்துவிட்டான் இன்று சாயி பிறந்துவிட்டான் 
எங்கள் சாயி பிறந்து விட்டான்
(2)
(MUSIC)
சீலம்உலகிலே மீண்டும் விளங்கித்தோன்றவே துலங்கித்தோன்றவே (SM) 
மாயஉலகிலே தெய்வ மனிதனாகவே மனிதனாகவே
ஈசனான சாயிநாதன் தொன்றினானடா 
பாசம்ஊறும் நெஞ்சினாலே அருளுவானடா 
அன்பைச் சொரிந்தே வாடும் உயிரின் துயரை போக்கும்
சாயி பிறந்துவிட்டான் இன்று சாயி பிறந்து விட்டான்
எங்கள் சாயி பிறந்து விட்டான்
(MUSIC)
ஆஆ .. ஆஆ .. ஆஆ ..
(SM)
அடர்ந்தகானிலே தவத்தில் முனிவர்தேடியே முனிவர்தேடியே
கண்டிடாமலே அவர்கள் வாடும்போதிலே வாடும்போதிலே
லோகம்நாடி இன்றுசாயி வந்ததேனடா
பாசம்கூடி மனிதரூபம் கொண்டதேனடா
அன்பைச் சொரிந்தே வாடும் உயிரின் துயரை போக்க
சாயி நினைத்து விட்டான்  இன்று சாயிபிறந்துவிட்டான்
எங்கள் சாயிபிறந்துவிட்டான்
(BOTH)
வந்து வழங்கிட என்றும் உலகை நாடித் தஞ்சம்
சாயி பிறந்துவிட்டான் இன்று சாயிபிறந்து விட்டான் 
எங்கள் சாயி பிறந்து விட்டான்





No comments:

Post a Comment