சாய்ராம் கருணைக்கு நிகரேது (2)
அவன் மனம்தரும் அன்புக்கு இணையேது
பெருமானே உந்தன்அவதாரம்
வந்துநிகழ்ந்திட வேண்டும் விரைவாக
சாய்ராம் கருணைக்கு நிகரேது
(MUSIC)
கடலெனவே பெருகும் திருநீறும் எம்மைக்
காப்பதற்கே பெருகி உருவாகும்
பெரும் ஆறாகும்
(MUSIC)
நோய்களின் கொடுமைக்கு முடிவாகும்
உந்தன் மருத்துவத்தின் சேவை அதுவாகும்
நோய்கள் பறந்தோடும்
(MUSIC)
பூமியில் வாழ்ந்திட வரவேணும் நீமறுபடி பாரினில் வரவேணும்
பிரேமசாயி வடிவாக
(MUSIC)
வாராயடா-அன்பை அனுதினமும்-நிலைநாட்டிடஇன்னும்ஒரு அவதாரம்
பிரேமசாயி அவதாரம்
(MUSIC)
மண்ணினில் பசிகொண்டு உயிரெல்லாம் நொந்து
கண்ணும் ஊனும் இருண்டு தினம்வாடும்
உன்மனம் அதைப்போக்கும்
(MUSIC)
சாய்ராம் கருணைக்குநிகரேது(திருமால் பெருமைக்கு நிகரேது)
தாய்தந்தை என்றே இருந்தாயே அன்று
அருளியது உந்தன் அவதாரம்
சத்யசாயி அவதாரம்
(MUSIC)
ஷிரிடியில் இருந்ததுந்தன் வடிவாகும்
மண்ணில் உயர்வழி காட்டிய அவதாரம்
ஷீர்டிசாயி அவதாரம்
(MUSIC)
நீதுயில் கொண்டது போதாதோ
பின்பு எதுக்குதான் உன்மனம் இரங்காமை வாராய்நீ
(MUSIC)
உலகில்நெறிமுறை தந்தாயேநீ பூமியில்-மறுபடி வா..தா..யே
மறுபடி வா..தா..யே
(MUSIC)
விதிமுடிந்ததென பகைமுடிக்கஎன இல்லா-வண்ணம் அவதாரம்
விரைவில்அன்புதரும் மனதில்மாற்றம்தரும் வண்ணம்உண்மை ஒளியாக
சத்திய-வடிவாய்-வந்தாயேநீ எடுக்கவேண்டுமொருஅவதாரம்
அன்பின் அவதாரம்
(MUSIC)
சாய்ராம் கருணைக்கு நிகரேது
அவன் மனம்தரும் அன்புக்கு இணையேது
சாய்ராம் கருணைக்கு நிகரேது
நிகரேது... நிகரேது..
No comments:
Post a Comment