Sunday, May 10, 2020

221. துன்பங்களே துயரங்களே (மணமகளே மருமகளே)




துன்பங்களே துயரங்களே போ போ
எங்கள் சாயிராமன் பிறந்துவிட்டான் போ போ 
 தினம்புரியும்  பூஜைகளே  வா வா 
சாயிகோவில்கொண்டஆண்டவன்தான் வா வா
 (2)
(MUSIC)
பணமிருந்தும் பலமிருந்தும் அமைதி இல்லையே
நண்பர்துணையிருந்தும் மக்கள்நெஞ்சில் பயத்தின் தொல்லையே
இந்த நிலை இனியுமில்லை வந்த துணையினால்
எங்கள் வாழ்வில் நிலவும் அமைதிஇனி சாயி அன்னையால் 
 துன்பங்களே துயரங்களே போ போ
எங்கள் சாயிராமன் பிறந்துவிட்டான் போ போ 
 தினம்புரியும்  பூஜைகளே  வா வா 
சாயி கோவில்கொண்ட ஆண்டவன்தான் வா வா
(MUSIC)
கல்விதரும் பாசம்தரும் தந்தைஎங்கள்சாயி
பெற்றவர்கள் போலணைக்கும் தெய்வம் எங்கள்சாயி
அன்புதரும் அருளைத்தரும் எங்களது தாயே (2)
பர்த்திபுரி ஷிரிடிபுரி த்வாரகையின் மாயி
துன்பங்களே துயரங்களே போ போ
எங்கள் சாயிராமன் பிறந்துவிட்டான் போ போ 
 தினம்புரியும்  பூஜைகளே  வா வா 
சாயி கோவில்கொண்ட ஆண்டவன்தான் வா வா
(MUSIC)
தங்கநகை வைரநகை போலமங்காது
சாயி தந்திருக்கும்  அன்பினுக்கு விலைகிடையாது
பொங்கி வரும் துன்பங்களும் இனிஇருக்காது
அவன் அன்பிருந்தால் வேறுதேவை களும்கிடையாது
துன்பங்களே-துயரங்களே போ போ
எங்கள்சாயிராமன் பிறந்துவிட்டான் போ போ 
தினம்புரியும்  பூஜைகளே  வா வா 
சாயி கோவில்கொண்ட ஆண்டவன்தான் வா வா




No comments:

Post a Comment