Sunday, May 10, 2020

214. அவன் மெல்ல நடந்தான் (அவள் மெல்லச் சிரித்தாள்) **



அவன் மெல்லநடந்தான் திருநீறைக்கொடுத்தான்
வினை இல்லாமல் போக்கிட சாயி.. சாயி 
(2)
நெஞ்சில் அன்புகொண்டான் மண்ணில் சேவை செய்தான்
விண்ணில் நில்லாது மண்பிறந்தசாயி
(Very Short Music)
அவன் மெல்லநடந்தான் திருநீறைக்கொடுத்தான்
வினை இல்லாமல் போக்கிட சாயி.. சாயி 
(Music)
பரம்விட்டுப் பிறந்தான் மண்ணைத் தொட்டுநடந்தான்
நெஞ்சம்கொண்டஅன்பினாலே அவன்சிறந்தான்
(Very Short Music)
அவன் பாற்கடலில் அன்று தூங்கி வந்தான்
நெஞ்சில்  தூங்கிடும் ஆன்மத்தை எழுப்பவந்தான் 
(Very Short Music)
ஓரடிஉன்னடி எடுத்திடசாயிராம் நூறடிஎடுத்தவன் வருகின்றான் 
(MUSIC)
அவன் மெல்லநடந்தான் திருநீறைக்கொடுத்தான்
வினை இல்லாமல் போக்கிட சாயி.. சாயி
(MUSIC)
அவன்நெஞ்சம் உலகில் தரும் அன்பின் இனிமை
தந்த ஆனந்தம் சொல்லிடப் போமோ (Very Short Music)

துயர் போக்கி வந்தான்  நெஞ்சில் சாந்தி தந்தான்
பெரும் சம்சாரக் கடலினில் படகவன்தான் 
(Very Short Music)
சாயிராம் அற்புத  நாடகமாயிரம் நாவொன்று போதுமோ சொல்லிடவே (2)
அவன் மெல்லநடந்தான் திருநீறைக்கொடுத்தான்
வினை இல்லாமல் போக்கிட சாயி.. சாயி ..ஓ..ஒ..


No comments:

Post a Comment