நமக்கு இன்பமினி நம்சோகம் மறைந்ததடி
சாயிபிரா னவதரிப்பால் உள்ளங்களும் மலர்ந்ததடி
உலகில் உயிர்களுமே களிநடனம் புரிந்தததடி
என்றுமில்லா பெருமகிழ்ச்சி இதயமெல்லாம் நிறைந்ததடி
நமக்கு இன்பமினி நம்சோகம் மறைந்ததடி
சாயிபிரா னவதரிப்பால் உள்ளங்களும் மலர்ந்ததடி
(MUSIC)
மூடிய இதயங்களும் மூடாது-திறக்குமினி (Short music)
வானோர்க்கும் கிடைக்காத பேறும்நமக்குக் கிடைத்ததடி (Short music)
காடுசென்ற முனிவரெல்லாம் நாடுவந்து சேர்ந்தனரே
த்யானம்விட்டு நேரினிலே காணவந்தார் இறைவனடி
நமக்கு இன்பமினி நம்சோகம் மறைந்ததடி
சாயிபிரா னவதரிப்பால் உள்ளங்களும் மலர்ந்ததடி
(MUSIC)
சாயிராம் மண்ணிலே நீதந்த அன்பெல்லாம்
மனத்துக்கு உணவுஅம்மா
நான்என்று சொல்வதை சாய்என்று சொல்வதால்
பாரெல்லாம் வாழுமம்மா
யுகங்களாய்த் தொடர்கின்ற வினைகளைப் போக்கிட
உன்னருள் போதுமம்மா.. உன்னருள் போதுமம்மா
நமக்கு இன்பமம்மா நம்சோகம் மறைந்ததம்மா
சாயிபிரா னவதரிப்பால் உள்ளங்களும் மலர்ந்ததம்மா
உலகில் உயிர்களுமே களிநடனம் புரிந்ததம்மா
என்றுமில்லா பெருமகிழ்ச்சி இதயமெல்லாம் நிறைந்தம்மா
நமக்கு இன்பமம்மா நம்சோகம் மறைந்ததம்மா ... ஹோய்
(MUSIC)
நல்லவரின் இதயங்களில் ஒளிவழங்கும் தெய்வமடி (SM)
மற்றவரின் மனங்களையே மாற்றும் சாயி நீறின்பொடி (SM)
பல்லாண்டு தேடலடி பாரில்நலோர் வேண்டலடி
பசிதாகம் போக்குமந்த சாயி என்ற தாயின் மடி
நமக்கு இன்பமினி நம்சோகம் மறைந்ததடி
சாயிபிரா னவதரிப்பால் உள்ளங்களும் மலர்ந்ததடி
No comments:
Post a Comment