Saturday, May 9, 2020

194. சாய்ராம் மீண்டும் உலகில்(கடவுள் மனிதனாக) **




சாய்ராம் மீண்டுமுலகில் பிறக்கவேண்டும்
அவன் திரும்பும்வரை கீதம்எழும் மீண்டும்மீண்டும்
பிரிவுதரும்  துன்பத்திலே மூழ்கிவா..டும் இகம் 
அவன்வந்தால் மறுபடியும் உயர்ந்து வாழும் 
சாய்ராம் மீண்டுமமுலகில் பிறக்கவேண்டும்
(MUSIC)
எத்தனை வரம்கொடுத்தான் எல்லோர்க்கும் கைகொடுத்தான்
அத்தனை உயிர்களுக்கும் அன்புஎன்னும் அமுதளித்தான்
(2)
அதைப்  பாரெங்கும்  தூவிவிட்டான் உள்ளத்திலே மேவிநின்றான்
பாரெங்கும்  தூவிவிட்டான் உள்ளத்திலே மேவிநின்றான்
உயிர்களையே வாடவிட்டு  உயரத்திலேன் பறந்துவிட்டான்
சாய்ராம் மீண்டுமுலகில் பிறக்கவேண்டும்
(MUSIC)
அவனை தினம்நினைப்போம் சேவைகள் புரிந்திருப்போம்
நாளெலாம்-பண்ணிசைத்து அவன்வரவே காத்திருப்போம்
(2)
வருவான் மறுபடியும் மாந்தனாய்-வந்திடுவான் (2)
தாயெனவே ப்ரேமையினை வழங்காமல் எங்குசெல்வான்

சாய்ராம் மீண்டுமுலகில் பிறக்கவேண்டும்
அவன் திரும்பும்வரை கீதம்எழும் மீண்டும்மீண்டும்
பிரிவுதரும்  துன்பத்திலே மூழ்கிவாடும் இகம் 
அவன்வந்தால் மறுபடியும் உயர்ந்து வாழும் 
சாய்ராம் மீண்டுமுலகில் பிறக்கவேண்டும்




No comments:

Post a Comment