வாட்டத்தைப் போக்கிடவே சாயிஓடிவரமாட்டாயோ
நெஞ்சில்எழும் சோகத்தையே தாயே நீதுடைக்க மாட்டாயோ
(2) + (SHORT MUSIC)
குத்தும்வலி நெஞ்சிருக்க ஹோய் கோவைஎனக் கண்சிவக்க(2)
கத்தியழும்பிள்ளைகளை தாயே நீயணைக்கமாட்டாயோ (2)
குத்தும்வலி நெஞ்சிருக்க கோவைஎனக் கண்சிவக்க..ஹோய்
கத்தியழும்பிள்ளைகளை தாயே நீயணைக்கமாட்டாயோ
(MUSIC)
“இளகும்நீ பூவாக
ஒளிதுஞ்சும் படியாக
இருந்தவனே கைகொடுத்து துயரெல்லாம் துடைத்தெடுத்து
பொல்லாத ஆசைகளை மனதைவிட்டே ஓடவைத்தாய்
ஆடவந்த என்தாயே பாடவைத்துப் போனாயே
பாடவைத்துப் போனாயே.. ஓ..ஓ..ஓ..
பாடவைத்துப் போனாயே”
வாஇன்னும்ஏன்துயிலே பார் உன்பேச்சுக்கேங்கையிலே ஹோய்
நாங்கள்விடும்கண்ணீரை நீயேகங்கையிலேசேர்த்துவிடு
(MUSIC)
“கன்னலாய் சொல்லெடுத்து
மேகமாய் அருள்சொரிந்து
அன்னமாய் நடைபோட்டு
மீண்டும்வந்தே நீநடமாடு
நான்துடிக்கப் போனவனே
பார்நடிக்க நீவாயேன்
நான்எழுதும் பண்ணாலே
தாயெழுந்து மண்வாயேன்”
பாசத்தைத் தந்தவனே
நான்உன்பிரிவால் பேதலிச்சேன் ஹோய்
பாசமென்னும் பூங்காற்றே சாயி பூமிவந்துவீசிவிடு
(MUSIC)
“வானைப்போய் நெறிப்படுத்த
தேவைஇல்லை மண்பிறந்து
ஏழைமனத் துயரங்களை போக்கிடவா நீவிரைந்து
ஏன்துறந்தாய் பூமிதனை ஏன்பறந்தாய் விண்ணகமே
நெஞ்சைமுட்டும் சோகம்போக வாமண்ணில் நீஇருக்க
வாமண்ணில் நீஇருக்க..ஹோய்
வாமண்ணில் நீஇருக்க”
கானுறைமுனிவர்களும் வந்தே உன்திருப்பதம்பணியே..ஹோய்
ஆட்சி செய்த மன்னவனே சாயிமீண்டும்வர மாட்டாயோ
வாட்டத்தைப் போக்கிடவே சாயிஓடிவரமாட்டாயோ..ஹோய்
நெஞ்சில்எழும் சோகத்தையே தாயே நீதுடைக்க மாட்டாயோ
(BOTH)
No comments:
Post a Comment