Thursday, May 7, 2020

147. இந்த்ராதி தெய்வங்கள் ( சந்திரோதயம் ) ***


இந்த்ராதி தெய்வங்கள் பணிசெய்யுமே
சந்த்ராதி க்ரகங்களும் துதிசெய்யுமே 
(2)
என்றாலும் மண்மீது பணிசெய்யவே
எமக்காக வந்தாயே நீ ஸ்வாமியே
இந்த்ராதி தெய்வங்கள் பணிசெய்யுமே
சந்த்ராதி க்ரகங்களும் துதிசெய்யுமே
(MUSIC)
உன் வாக்கு பொல்லாத வினைபோக்குமே
 ஒளிசிந்தும் உன்பாதம் மலராகுமே
(2)
அறம்தன்னில் வழுவாத பெரியோருமே
நெஞ்சோடு தான்பார்த்த பொருள்சாயியே 
எந்நாளும் பிரியாதே எமைசாயியே 
வலம் வந்திடாய்சாயி புவிமீதிலே
அருள் தந்திடாய் ஒரு  திருநோக்கிலே
என்பாட்டை  தினம் கேட்க  வா சாயியே
என்நாவில் நீநின்று சொல்சாயியே
வலம் வந்திடாய்சாயி புவிமீதிலே
அருள் தந்திடாய் ஒரு  திருநோக்கிலே
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஹா..ஹா..ஹா..ஹா (2)
(MUSIC)
சித்தாடும் சத்தாகும் நீ சாயியே 
விழும்-நெஞ்சை உயர்வாக்கும் அருள் சாயியே 
(2)
உன்வேஷம் புவிமீது எழில் சாயியே 
என்தோஷம் அழிகின்ற வழி சாயியே
எந்நாளும் புவியாட  வா சாயியே
இந்த்ராதி தெய்வங்கள் பணிசெய்யுமே
சந்த்ராதி க்ரகங்களும் துதிசெய்யுமே 
(MUSIC)
வினையோடு பிறவாத உடல் இல்லையே
நினைவோடு இருக்காதமனம் இல்லையே
உனக்காக துடிக்கின்ற உலகத்திலே
துணையாக நீஇங்கு ஏன்இல்லையே
என்சாயி இல்லாமல்  பெரும்தொல்லையே
இரவோடு புலம்வந்த மால் சாயியே
இமயத்தில் இருக்கின்ற சிவன் சாயியே
மடிமீது அணைக்கின்ற தாய் சாயியே
இகம்தொட்டு பரம்மட்டில் இறை சாயியே
ம்ஸ்வாமி எந்நாளும் ஸ்ரீசாயியே
வலம் வந்திடாய்சாயி புவிமீதிலே
அருள் தந்திடாய் ஒரு  திருநோக்கிலே
இந்த்ராதி தெய்வங்கள் பணிசெய்யுமே
சந்த்ராதி க்ரகங்களும் துதிசெய்யுமே 




No comments:

Post a Comment