Thursday, May 7, 2020

146. மின்னுமொளி (மின்மினியை) **



மின்னுமொளி கண்களிலே கொண்டவனாய்
மண்ணுலகில் வந்தான் என்தந்தை சாய்ராம்
(2)
ஓ..சாய்ராம்.. சாய்ராம்..பாபா 
லல்ல..லல்ல..லல்ல (2)
பாபா சாய்ராம் பாபா ஓ..சாய்ராம்.. சாய்ராம்..பாபா
மிதந்துவரும் நடையழகில் அன்னங்களும்  தோற்றிடுமோ (2)
புன்னகைதான் பொன்னகையோ இதயமதை விரும்பியதோ(2)
பந்துசிகை சிவன்சடையோ பொற்பதங்கள் நறுமலரோ பாபா
சாய்ராம் பாபா..ஓ..சாய்ராம்.. சாய்ராம்...பாபா
மின்னுமொளி கண்களிலே கொண்டவனாய்
மண்ணுலகில் வந்தான் என்தந்தை சாய்ராம்
ஓ..சாய்ராம்.. சாய்ராம்..பாபா
(MUSIC)
மனப்புயல் சிரிப்பினில் அடக்கிடும் விதம்சிறந்தான்
பசிக்குரல் கேட்கையில் புதுப்புது சுவை சமைத்தான்
(SHORT Music)
சிரித்திடும்  தாய்முகம் சாயிபிரான்
வாடிடும் வேளையில் தேற்றிடுவான்
ஆ..ஆ..ஆ.... பாபா சாய்ராம் பாபா ஓ..ஓ..சாய்ராம்..சாய்ராம்..பாபா
 (MUSIC)
அவன்திரு  சரித்திரம் வாழ்ந்திடும்  வழிகொடுக்கும்
சிறப்பினைக் கொடுத்திடும் விதத்தினில் பேர்கிடைக்கும்

அவன்உடன் பிறப்புநம் புண்ணியமோ
வாய்த்திடும் அவன்அருள்  ஓர்தனமோ 
(2)
சாய்ராம்..சாய்ராம்..பாபா ..ஓ..சாய்ராம்.. சாய்ராம்..பாபா







No comments:

Post a Comment