Wednesday, May 6, 2020

114. விண்ணிருந்து (எட்டடுக்கு மாளிகையில்)**


விண்ணிருந்த சாயிபிரான் மண்பிறந்து வந்ததனால் 
இன்பம் கொண்டு வாழ்ந்தோமடி இன்று விட்டுச்செல்ல நொந்தோமடி
(2)
மண்ணை விட்டுச்செல்ல நொந்தோமடி
(MUSIC)
அவன்பேரை மனம்நினைந்து  சீரோடு வாழ்ந்தஎன்னை 
பாராமல் சென்றானடி கண்ணில்ஆறோடச் செய்தானடி
(2)
(SHORT MUSIC)
கண்ணில்ஆறோடச் செய்தானடி
(MUSIC)
கையில்திரு நீறுதந்து  கடல்போல் அருள்புரிந்து(2)
அற்புதங்கள் செய்தானடி  மண்ணில்
அற்புதங்கள் செய்தானடி அவனே விண்நாடி-விட்டானடி..!
விண்ணிருந்து தெய்வமன்று மண்பிறந்து வந்ததென்று
இன்பம் கொண்டு வாழ்ந்தோமடி
இன்று பிரிவுகண்டு நொந்தோமடி 
(MUSIC)
ஞாலங்கள்   உன்படைப்புன் கோலமும் கண்துடைப்பே(2)
மண்ணில் வரவேண்டும் அய்யா சாயி
துன்பம் தீர்க்க  வேண்டும் அய்யா எங்கள்
துன்பம் தீர்க்க  வேண்டும் அய்யா 
(SHORT MUSIC)
விண்ணிருந்து தெய்வமன்று மண்பிறந்து வந்ததென்று
இன்பம் கொண்டு வாழ்ந்தோமடி
இன்று பிரிவுகண்டு நொந்தோமடி
 இன்று பிரிவுகண்டு நொந்தோமடி





No comments:

Post a Comment