Monday, May 8, 2017

432. நெஞ்சத்தில் தோன்றிடுவான் (தெய்வத்தின் தேரெடுத்து)***





விருத்தம்
என் மனத்தில் ஏது-அன்பு கல்-மனத்தில் ஏது-முன்பு
சாயிபிரான் புகுந்த-உடன் ஊறியது ஆச்சர்யமே
Short Music

நெஞ்சத்தில் தோன்றிடுவான் சாயி அன்போடு 
நம்பிக்கையோடு செய்வாய் சேவையன்போடு 
(2)
 (MUSIC)
ஆவிக்கு நாடு தேகத்தின் கூடு
ஆண்டவன் தந்தான் வாடகை வீடு
(2) 
என்றைக்கும் இருந்திடுமோ கூறு-உன் பேரு (2)
ஆவி பிரிந்த பின்னோ அதற்கொரு பேரு அதற்கெது வேறு  
நெஞ்சத்தில் தோன்றிடுவான் சாயி அன்போடு 
நம்பிக்கையோடு செய்வாய் சேவையன்போடு 
(MUSIC)
நீர்-வற்றி போன-பின்பு குளம்- வெறும் கரம்பு  
தேகத்தில் நாடி-சென்றால் அதில்-இலை சிறப்பு  
ஆதலி..னால்-புரிவாய் சேவையை இன்று 
வேறெதும் நனி நன்றோ அது-வெறும் நடிப்பு பிற எதும் நடிப்பு
  நெஞ்சத்தில் தோன்றிடுவான் சாயி அன்போடு 
நம்பிக்கையோடு செய்வாய் சேவையன்போடு 
 (MUSIC
புண்படும் நெஞ்சினுக்கு ஆறுதல் சொல்வாய்
கைகொண்டு சேவை தனை தினம்-தினம் செய்வாய்
(2)    
சாதனையே இதன்-மேல் சாத்திரம் இல்லை (2)
சாயிபி..ரானின் சொல்லில் அசத்தியம் இல்லை (2)
நெஞ்சத்தில் தோன்றிடுவான் சாயி அன்போடு 
நம்பிக்கையோடு செய்வாய் சேவையன்போடு 






No comments:

Post a Comment