Saturday, May 6, 2017

417. அன்பையே பேராக (கல்லிலே கலைவண்ணம் கண்டார்)



அன்பையே பேராகக் கொண்டாய்
அன்பையே பேராகக் கொண்டாய்
சாயி-சமமாக எல்லோர்க்கும் அதனைச் சுரந்தாய்
(2) 
அன்பையே பேராகக் கொண்டாய்
கல்லினைப் போல் கடின நெஞ்சை 
நீ தேடியே ஊடியே மாற்றம் புரிந்தாய் 
அன்பையே பேராகக் கொண்டாய் +  (Short Music)
பேர் சொல்லு நாவாலே-என்றாய் 
பிறர் துயர்-போக்கும் சேவையை கைகொள்ளு என்றாய்
(2)
மெய்யாக உலகில் இருந்தாய் (2)
உனை மெய்யோடு மெய்யாக என்று-நான் காண்பேன்   
அன்பையே பேராகக் கொண்டாய்
சாயி சமமாக எல்லோர்க்கும் அதனைச் சுரந்தாய்
அன்பையே பேராகக் கொண்டாய்
 (MUSIC)
உருவத்தில் ஒரு-மனிதன் தானே 
நீ உண்மையில் சிவரூப இறைவடிவுதானே
(2)
நடமாட என்சாயி உன்னை (2)
கோல மயிலாக என்றுதான் காணுமென் கண்ணே 
சாயி-சமமாக எல்லோர்க்கும் அதனைச் சுரந்தாய்
அன்பையே பேராகக் கொண்டாய் 
அன்பையே பேராகக் கொண்டாய் 
(MUSIC)
உயராத என்-ஜென்மம் சாயி 
உனை-அருவாகக் காண்-திறன் அதற்கேது ஸ்வாமி
(2)
கேட்டபடி கேட்போர்க்கு உருவம் (2)
கொண்டு இறைரூபம் தோன்றுமென நல்லோர்-சொன்னாரே
 அன்பையே பேராகக் கொண்டாய்
சாயி சமமாக எல்லோர்க்கும் அதனைச் சுரந்தாய்
(2)
அன்பையே பேராகக் கொண்டாய்




No comments:

Post a Comment