ம்ம்.. ம்ம்
தண்ணீரைப்-போல் திரு நீறைத் தருவானே சாயிபிரான் (2)
தத்தளிக்கும்-மனதில் சஞ்சலத்தைப்-போக்கி
அதனுக்குள் புகுவான்-மெதுவாக தலைவிதி மாறிட-அதுவாக
அதற்குப்-பின்னே ஆனந்தமே கொடுத்திடுமவன்-பேர் இதமாக
தண்ணீரைப்-போல் திருநீறைத் தருவானே சாயிபிரான்
(MUSIC)
அண்டத்தைப் படைப்பது அவன் அருளே
அணுவில் அணுவும் அவன்-அருளே அவன்-அருளே அவன்-அருளே
ஆதவன் ஒளி-அவன் திருவருளே
அதனால் விலகிடும் நம்-இருளே நம்-இருளே நம்-இருளே
நன்கு அதனால் விலகிடும் நம்-இருளே
தண்ணீரைப்-போல் திருநீறைத் தருவானே சாயிபிரான்
(MUSIC)
மனம்-தான் அவன்-வரும் கோயில்-என்று
அதை-ஓர் தூய்மையின் சின்னம்-என்று
(2)
வைத்திருப்போரின் இதயத்துக்கு
வந்திருப்பானதில்-ஐயமெதற்கு
(2)
வந்திருப்பானதில்-ஐயமெதற்கு
தண்ணீரைப்-போல் திருநீறைத் தருவானே சாயிபிரான்
தத்தளிக்கும்-மனதில் சஞ்சலத்தைப்-போக்கி
அதனுக்குள் புகுவான்-மெதுவாக தலைவிதி மாறிட-அதுவாக
அதற்குப்-பின்னே ஆனந்தமே கொடுத்திடுமவன்-பேர் இதமாக
தண்ணீரைப்-போல் திருநீறைத் தருவானே சாயிபிரான்
ம்ம்.. ம்ம்
No comments:
Post a Comment