Wednesday, May 10, 2017

310. என்-ஸ்வாமி (அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு) **



என்-ஸ்வா மீ …!
மண்ணுக்கு வந்து-உலவு
ஏங்குது எந்தன்-மனது
நெஞ்சுக்குள் வந்து-தடவு…உன்
அன்பெனும் நல்ல-மருந்து .. அன்பெனும் நல்ல-மருந்து

(2)
ஓஹோ ஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ

வெண்ணையில் செய்தஉன் நெஞ்சுக்கு

இணை-இல்லையே என்பதென் முடிவு
(1+SM+1)
எங்குதான் கிடைத்திடும் அன்பு
எனும் சலிப்பே தேடலில் இருப்பு
யாருக்கு உன்னருமை புரியும்
த்யானத்தில் சுடர் விட்டு எரியும்
ஞானத்தில் மட்டும் அது தெரியும்
ஞானமும் ஸ்வாமி..யால்தான் கிடைக்கும்
என்-ஸ்வா மீ …!
மண்ணுக்கு வந்து-உலவு
ஏங்குது எந்தன்-மனது
நெஞ்சுக்குள் வந்து-தடவு…உன்
அன்பெனும் நல்ல-மருந்து (2)
(MUSIC)

அடிமேல் அடிவைத்து வரும் நாள்
பாரில் அழகாய் தரிசனம் தரும் நாள்
(1+SM+1)
வருமா என ஒரு பிள்ளை
விழி நீரோ கடல்கொள்ள வில்லை
மண்ணுக்குத் தந்தை-என்ற சொந்தம்
யாருக்கும் அன்னை-என்ற சொந்தம்
பூமிக்கு ஸ்வாமி-என்ற சொந்தம்
சாயிக்கு மட்டும்தானே பொருந்தும்
என்-ஸ்வா மீ …!
மண்ணுக்கு வந்து-உலவு
ஏங்குது எந்தன்-மனது
நெஞ்சுக்குள் வந்து தடவு…உன்
அன்பெனும் நல்ல மருந்து (2)





No comments:

Post a Comment