Wednesday, April 26, 2017

84. சாயியைப்போல் ( நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் )***

சாயியைப்போல் அருள்புரியும் தெய்வம்-ஏதுமில்லை
கேட்டதெல்லாம் கொடுத்திருக்கும் தெய்வம்-வேறுஇல்லை
(2)
முடிவுமில்லா முதலுமில்லா ஆதியேசாயிபிரான்
தொடர்ந்திருக்கும் பவபயங்கள் போக்கிடும் ஆண்டவனே

(Music)
ஆயிரமாய்வரும்-யுகங்கள் அதில் அவதரிப்பானே-சாயி
ஊரார்போற்ற உலகேபோற்ற இருந்திருக்கும் அவன்இறைதானே
அவனைமட்டும் நினைத்திருந்தால் துன்பம் ஏதுமில்லை
அவன்கொடுத்த அன்பிருக்க இன்பம் தேவையில்லை
சாயியைப்போல் அருள்புரியும் தெய்வம்-ஏதுமில்லை
கேட்டதெல்லாம் கொடுத்திருக்கும் தெய்வம்-வேறுஇல்லை
 (Music)
மண்பால்-யாக்கை எடுத்தான் அவன் அன்பால் ஊரை அணைத்தான்
இதயம்-முழுதும் அன்பைஎடுத்து உலகம்-முழுதும் அளித்தானே
பர்த்தியிலே அவதரித்தான் காவிஉடைதரித்தான்
சேவையினைப் புரியவைத்தான் பாதை தெரியவைத்தான்
சாயியைப்போல் அருள்புரியும் தெய்வம்-ஏதுமில்லை
கேட்டதெல்லாம் கொடுத்திருக்கும் தெய்வம்-வேறுஇல்லை
முடிவுமில்லா முதலுமில்லா ஆதியேசாயிபிரான்
தொடர்ந்திருக்கும் பவபயங்கள் போக்கிடும் ஆண்டவனே
சாயியைப்போல் அருள்புரியும் தெய்வம்-ஏதுமில்லை
கேட்டதெல்லாம் கொடுத்திருக்கும் தெய்வம்-வேறுஇல்லை

No comments:

Post a Comment