மண்ணில்-அன்று வந்தசாயி எங்கடா-எங்க?
நம்துன்பம் போக்கிக் களைத்துப்போனான் தூங்கடா தூங்க
(Short Music)
மண்ணில்-அன்று வந்தசாயி எங்கடா-எங்க
நம்துன்பம் போக்கிக் களைத்துப்போனான் தூங்கடாதூங்க
(Music)
லோகத்திலே ஒண்ணுமில்லே போகத்திலே நன்மையில்லே(2)
சொத்தினிலே சத்துமில்லே என்றவனேன் இன்றுஇல்லே?
மண்ணில்-அன்று வந்தசாயி எங்கடா-எங்க?
நம்துன்பம் போக்கிக்-களைத்துப்போனான் தூங்கடாதூங்க
(Music)
கண்ணிலிருந்தாய் என்தாயே தன்னையேதந்தாய் என்தாயே(2)
மண்ணிருந்தாயே-என்தாயே விண்பறந்தாயே ஏன்தாயே
சோதனையில் வந்துநின்றாய் வேதனைகள் போகச்செய்தாய்
போதனைகள் செய்துவந்தாய் ஏன்பறந்தாய் எங்கள்சாயி
மண்ணில்-அன்று வந்தசாயி எங்கடா-எங்க?
நம்துன்பம் போக்கிக்களைத்துப்போனான் தூங்கடாதூங்க
(Music)
நெஞ்சமிருக்கு நெருப்பாக கொஞ்சியணைக்க வாதாயே (2)
ஒளியைக்கொடுக்கும் கண்போலே நீவாநீவா மண்மேலே
பாடியேநான் வேண்டுகின்றேன் உன்கழலை நாடுகின்றேன்
வாடியழும் சேய்களையே ஓடிவந்தே தூக்கிடம்மா
மண்ணில்-அன்று வந்தசாயி எங்கடா-எங்க?
நம்துன்பம் போக்கிக் களைத்துப்போனான் தூங்கடாதூங்க(2)
தூங்கடா..தூங்க..!..தூங்கடா..தூங்க..!
No comments:
Post a Comment