Thursday, March 17, 2016

31. இந்த பார்தன்னில் (என்னை யாரென்று எண்ணி எண்ணி) ***




இந்தப்பார்தன்னில் வந்துவந்து நீபிறக்கிறாய்
அழும்குரல்கேட்டு ஓடிவந்து பால்வார்க்கிறாய்
(2)
நான்மண்மேலே அலைந்தோடும் சேயல்லவா
கோணாமல் அணைக்கும்நீ தாயல்லவா 
இந்தப்பார்தன்னில் வந்துவந்து நீபிறக்கிறாய்
அழும்குரல்கேட்டு ஓடிவந்து பால்வார்க்கிறாய்
(Music)
என்றும் நிலையாத என்வாழ்வில் நீதானய்யா
உருகாத மனம்தன்னி-லும்நீஅய்யா
(2)
அலையாக வினைவந்து உழன்றேனய்யா (2)
காற்றாக நீவந்து காப்பாய் அய்யா 
(Very Short Music)
இந்தப்பார்தன்னில் வந்துவந்து நீபிறக்கிறாய்
அழும்குரல்கேட்டு ஓடிவந்து பால்வார்க்கிறாய்
(Music)
எந்தன் மனம்தன்னி..லேஎன்றும்-இருப்பாய்அய்யா
மலர்கூடும் ஒளியாக எழுவாய்-அய்யா
(2)
கணம்கூட உனைநானும் மறவேனய்யா(2)
தினந்தோறும் உனையேதான் நினைப்பேனய்யா
(VSM)
இந்தப்பார்தன்னில் வந்துவந்து நீபிறக்கிறாய்
அழும்குரல்கேட்டு ஓடிவந்து பால்வார்க்கிறாய்
(Music)
என்றும் உனைப்பாடும் நானுந்தன் சேயில்லையாநீ
அன்பான மனம்கொண்ட தாயில்லையா
(2)
உனக்காக தினந்தோறும் அழுதேனைய்யா (2 )
விரைந்தேநீ மண்வந்து பிறப்பாய் அய்யா
(VSM)
இந்தப்பார்தன்னில் வந்துவந்து நீபிறக்கிறாய்
அழும்குரல்கேட்டு ஓடிவந்து பால்வார்க்கிறாய்
நான்மண்மேலே அலைந்தோடும் சேயல்லவா
கோணாமல் அணைக்கும்நீ தாயல்லவா 
நான்மண்மேலே அலைந்தோடும் சேயல்லவா
கோணாமல் அணைக்கும்நீ தாயல்லவா 
இந்தப்பார்தன்னில் வந்துவந்து நீபிறக்கிறாய் .... (BOTH)

No comments:

Post a Comment