( இதோ எந்தன் தெய்வம் முன்னாலே )
இதோ எங்கள் தெய்வம் முன்னாலே
உன் ஒரேஒரு புன்னகையில் கண்டோமே
(2)
அன்பு கொண்டு மண்ணில் வந்த தந்தை நீயடா
எங்கள் அழுதகண்ணீர் துடைக்கும்கருணை அன்னைதானடா
(2)
இதோ எங்கள் தெய்வம் முன்னாலே
உன் ஒரேஒரு
புன்னகையில் கண்டோமே
(MUSIC)
ஒரு மனிதனாக அவதரித்துப் பிறந்தாய்
மிகப் புனிதமான சேவைகளிலே மகிழ்ந்தாய்
(2)
பெரும் செயல்களையே எளிமைகொண்டு புரிந்தாய்
மனதின் அன்புதந்த வலிமையிலே ஒளிர்ந்தாய்
(2)
அன்பு கொண்டு மண்ணில்வந்த தந்தை நீயடா
எங்கள் அழுதகண்ணீர் துடைக்கும்கருணை அன்னை
தானடா
இதோ எங்கள் தெய்வம் முன்னாலே
உன் ஒரேஒரு புன்னகையில் கண்டோமே
(MUSIC)
நீ அன்னைக்குமே அன்னையுமாய் இருந்தாய்
நாங்கள் விழையும்வரம் கருணையிலே அளித்தாய்
கரும் மேகமென அருள்மழையைப் பொழிந்தாய்
யாரும் தொழுதிடவே தெய்வமெனத் திகழ்ந்தாய் (2)
இதோ எங்கள் தெய்வம் முன்னாலே
உன் ஒரேஒரு புன்னகையில் கண்டோமே
(MUSIC)
நீ ஷிரிடியிலே சிவனுமாக இருந்தாய்
புட்ட
பர்த்தியிலே சக்தியாக உறைந்தாய்
வந்து அவதரித்து அன்புகாட்டி அணைத்தாய்
என்று
பிரேமசாயி வடிவினிலே பிறப்பாய் (2)
அன்பு கொண்டு மண்ணில் வந்த தந்தைநீயடா
எங்கள் அழுதகண்ணீர் துடைக்கும்கருணை அன்னை
தானடா
இதோ எங்கள் தெய்வம் முன்னாலே
உன் ஒரே ஒரு புன்னகையில் கண்டோமே
..ஆஹாஹாஹா
No comments:
Post a Comment