என்னென்று பாடிடுவேன் எப்படித்தான் நானுரைப்பேன்
சாயி நிதம் காட்டும் அதி-அற்புதமே
நாம் காணத் தோன்றும் சாயிநாதன் பதமே
(2)
என்னென்று பாடிடுவேன் எப்படித்தான் நானுரைப்பேன்
என்னென்று பாடிடுவேன் எப்படித்தான் நானுரைப்பேன்
சாயிநாதன் தோற்றமாகும் விதத்தை
நித்தம் காட்சியாக காணத்தரும்-தரி..சனத்தை
(2)
(MUSIC)
சின்ன ரதம்-போலவே தென்றல் நடை-போடுவார்
சொல்லில் தேன் ஊறவே சாயி உரையாடுவார்
சொல்லில் நான் கூறினால் அது பிழை தானன்றோ
சொல்லில் அடங்காத இறை ஆட்டம் அதுவல்லவோ
ரசித்து ரசித்து அதனில் மயங்கு அதுதான் முறை .. ஓ …. ஓ..
என்னென்று பாடிடுவேன் எப்படித்தான் நானுரைப்பேன்
சாயி நிதம் காட்டும் அதி-அற்புதமே
நாம் காணத் தோன்றும் சாயிநாதன் பதமே
(MUSIC)
தா .. நீ தாததா தஸாரிஸா நிநீதா தாதபா
ஓ …
நம்மைக் கடைத்தேற்றவே தெய்வம் பிறப்பாகுது
பக்தர் மனம் வாடினால் தெய்வம் மனம் தாங்குமா
மண்ணில் நாம் காணவே தெய்வம் நடக்கின்றதே
நம்மில் உறவோடு உறவாக வாழ்கின்றதே
உனக்கும் எனக்கும் நிஜத்தை விளக்கும் குருவாகவே
(MUSIC)
நம்-நம் மனக்கோவிலில் தெய்வம் குடியேறவே
வெள்ளைப் பால்போலவே சுத்தம் நாம் செய்குவோம்
பின்னர் பரராஜ்ஜியம் என்றும் நமக்காகவே
அங்கு பிறவாமல் குடியேற நாம் ஏகுவோம்
நினைக்க நினைக்க நினைக்கும் உளத்தில் ஆனந்தமே
ஓ
என்னென்று பாடிடுவேன் எப்படித்தான் நானுரைப்பேன்
சாயி நிதம் காட்டும் அதி-அற்புதமே
நாம் காணத் தோன்றும் சாயிநாதன் பதமே
No comments:
Post a Comment