பக்கத்தில் நடந்..து-வந்து கை-சுழற்றி நீறளித்து
தந்தைபோன்று காத்தணைக்கும் சாயீ
நீ கோடி கோடி கோடி-அன்னை சாயீ
(2)
பக்கத்தில் நடந்..து-வந்து கை-சுழற்றி நீறளித்து
பக்கத்தில் நடந்..து-வந்து கை-சுழற்றி நீறளித்து
ஈசன் சக்தி சேர்ந்து வந்த வடிவே
சகல தேவ-ரூப நாயகனும் நீயே
(2)
(MUSIC)
சின்ன ரதம்-போலவே தென்றல் நடை-போட்டவா
உன்னை பார்-காணவே மண்ணில் மெய்யானவா
நெஞ்சை பளிங்காக்கினால் அதில் நிஜம்-நீயன்றோ
உண்மை உணர்வாக எவர்க்குள்ளும் நீயே அன்றோ
தடுத்து அணைத்து எடுத்து கொடுத்த தாயல்லவோ.. ஓ …. ஓ..
பக்கத்தில் நடந்..து-வந்து கை-சுழற்றி நீறளித்து
தந்தைபோன்று காத்தணைக்கும் சாயீ
நீ கோடி கோடி கோடி-அன்னை சாயீ
(MUSIC)
தா .. நீ தாததா தஸாரிஸா நிநீதா தாதபா
ஓ …
உன்னை பார்-தெய்வமாய் கொண்டு கொண்டாடுது
என்றும் உனைக்காணவே வந்து அலைமோதுது
அன்பில் வரும்-யார்க்குமே பொங்கும் நீறைத்-தந்து
உண்மை எளிதாக அழகாகச் சொன்னாய்-நன்று
எவர்க்கும் விளங்கும் வகையில்-எடுத்துச் சொன்னாய்-அய்யே
(MUSIC)
இந்த இகவாழ்வினில் தெய்வம் உனைக்-கேட்கிறேன்
உன்னை மறவாமலே இரும் வரம்-கேட்கின்றேன்
அந்த பர-ராஜ்ஜியம் தன்னில் உனைக்-காணவே
உந்தன் திருநாமம் என்றென்றும் நான்-சொல்லுவேன்
நினைக்க உரைக்க இனித்து இருக்கும் உன் நாமமே
ஓ …
பக்கத்தில் நடந்..து-வந்து கை-சுழற்றி நீறளித்து
தந்தைபோன்று காத்தணைக்கும் சாயீ
நீ கோடி கோடி கோடி-அன்னை சாயீ
No comments:
Post a Comment