Monday, November 13, 2023

645.அன்னையைத் தேடிடும்(புன்னகை செய்திடும் )-Private album


 

When the mother sees the child's longing face searching for its mother,
her heart instantly goes out for the child.
SAI Pours the love of 1000s of such mothers.
Hey SAIma, you came & stood in front of me as personification of love.
You wiped my tears and comforted me with your soothing voice calling me Bangaru.

The mind is instatly transported to you on seeing your enchanting smile.
How can it return to me!
You performed magic by your love.

You are my father, mother. You are ever my Guru.
As love personified you give yourself to me, what else do I need.
How can I explain you oh.. my SAI!

You taught us the service. 
You didn't stop with just preaching,You yourself did it too.
You taught us the power of love merely by the love that overflows in your eyes.
You told " You are are also love personified,me and You are same".
You entered the conciousness and completely pervaded it too.
How can words express the soothing comfort that your face gives!
-----------------------------------

அன்னையைத் தேடிடும் சேய்முகம் 
கண்டிடத் தாய்மனம் ஓடிடும்
அன்பினில் ஆயிரம் தாயையும்  
மிஞ்சி விடும்.. என்றே
பொங்கிடும் அமுதம்  போலவும்   
கணமும் அன்பினைப் பொழிகிறாய்
இவ்..வுலகில்..
 அன்பின் வடிவாய் ..
என்னெதிரில் வந்தாய் 

கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய்  
என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 
(2)
(MUSIC)
உன்-முறுவல் கண்டு-மனம் 
உன்னிடத்தில் சென்று-விடும் 
எவ்விதம் தான் திரும்பும்-என்னில் 
செய்துவிட்டாய்-அன்பில் மாயம் ..
என்தந்தை  தாயும்-நீ 
எந்நாளும் குருவும்-நீ 
நீ ..அன்பின் ரூபம்  
அன்பே-ஓர் உருவாக 
நீ தன்னைத் தருகின்றாய் 
வே..றென்ன வேண்டும் 
என்னவென்று சொல்லிடுவேன் என்னருமை சாயி உன்னை 
(Brief pause)
கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய் என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 
(MUSIC) + ஆ ..
சொல்லோடு நின்றிடாமல் 
நீ சேவை  தானே-செய்தாய் 
கண்ணில் வழியும் ப்ரேமை ஒன்றால் 
நீ அன்பைச் சொல்லித்-தந்தாய்
அன்புதான் நீயும் என்றாய்
நானும்-நீயும் ஒன்றே-என்றாய் 
சிந்தையெல்லாம் நீ..யாக 
முழுதாகப் புகுந்தாயே 
உந்தன்-முகம் .. தந்த-இதம் 
எப்படிச் சொல் சொல்..லக் கூடும் 
அன்னையைத் தேடிடும் சேய்முகம் 
கண்டிடத் தாய்மனம் ஓடிடும்
அன்பினில் ஆயிரம் தாயையும்  
மிஞ்சி விடும்.. என்றே
பொங்கிடும் அமுதம்  போலவும்   
கணமும் அன்பினைப் பொழிகிறாய்  
---------------------
இவ்..வுலகில் ..
அன்பின் வடிவாய் ..
என்னெதிரில்-வந்தாய் 
(Brief Pause)
கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய் 
என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 
(2)
சாயி கீதம் 7

Other SONGS Recorded
முதல் பக்கம்  


No comments:

Post a Comment