Tuesday, April 4, 2023

617.யாரென்று இல்லை-இல்லை(பாட்டொன்று கேட்டேன்-பாவை முகத்தை) **


யாரென்று இல்லை எதற்கென இல்லை சேவையில் பேதமில்லை
மானிட சேவை மாதவ சேவை சேவையில் பேதமில்லை 
(Short Music)
மானிட சேவை மாதவ சேவை சேவையில் பேதமில்லை
(MUSIC)

நீ-கொண்ட அன்பு சொல்லினில் தெரிய
புரிவாய் சேவைதனை நீ புரிவாய் சேவைதனை 
புரிவாய் சேவைதனை 
பார் மெச்ச பண்பு செயலினில் தெரிய 
புரிவாய் சேவைதனை நீ புரிவாய் சேவைதனை 
புரிவாய் சேவைதனை
பரிவும் பண்பும் நிறைந்திருந்தாலே அதற்கீடு ஏதுமில்லை
இறை பூஜை வேறு இல்லை 
சேவை புரிந்ததும் நம் பணி நின்றது 
சாயியின் அருளில் உள்ளம்-நிறைந்தது 
செய்தது யாரென நாமொன்றும்-இல்லை சாயிபிரான் தானே

மானிட சேவை மாதவ சேவை சேவையில் பேதமில்லை
 (MUSIC)

நாம்-கற்ற பாடம்:சாயியின் சேவையில் யாரெனும் கேள்வி இல்லை ..கேள் 
யாரெனும் கேள்வி இல்லை
அவன்-தந்த பாதை சேவையில் ப்ரேமை அதிலே வேறு இல்லை கேள் 
வேறே ஏதுமில்லை
சாயியின்.. சொல்லை..  வாழ்வில்-கொண்டாலே
வேறேதும் தேவையில்லை (2)
சேவை புரிந்ததும் நம் பணி நின்றது 
சாயியின் அருளில் உள்ளம்-நிறைந்தது 
செய்தது யாரென நாமொன்றும்-இல்லை சாயிபிரான் தானே

மானிட சேவை மாதவ சேவை சேவையில் பேதமில்லை


Other SONGS Recorded



No comments:

Post a Comment