Saturday, January 7, 2023

605.அன்னம் ப்ரம்மா(புத்தன் ஏசு காந்தி பிறந்தது) **

அன்னம் ப்ரம்மா உணவே தெய்வம் என்பது உயர் வேதம் 

அதிலே உள்ளது உயர் போதம்

பசியின் பிடியில் வாடிடும் மாந்தர்  நாரணர் வடிவாகும்

நாளும் அவர்க்கு சேவைகள் புரி என சாயியின் வாக்காகும்  

வாழ்க்கையின் குறிக்கோள் அன்புடன் சேவை என்பது உயர்வாகும்

நாமும் இன்றே சேவையைச் செய்தல் சாயியை மகிழ்வாக்கும் 

அன்னம் ப்ரம்மா உணவே தெய்வம் என்பது உயர் வேதம் 

அதிலே உள்ளது உயர் போதம்

(MUSIC)

பசி கொண்ட பேரை உடன் சென்று கண்டு

அவர் கொண்ட நோவைத் தன..தென்று கொண்டு

கொடுக்கின்ற வாழ்வை நீ என்றும் கொண்டு 

இருக்கின்றதொன்றே இறை பூஜை என்று   

உண்மை என்று பேர் கொண்டு வந்த-நம் தெய்வத்தின் மொழியாகும்

இந்த வாக்கினை வாழ்க்கையில் கொள்வது நன்மைக்கு வழியாகும்

அன்னம் ப்ரம்மா உணவே தெய்வம் என்பது உயர் வேதம் 

அதிலே உள்ளது உயர் போதம்

(MUSIC)

பொருள் கொண்ட போதும் உயர்வென்பதில்லை 

எதைக் கொண்ட போதும் மனம் ஓய்வதில்லை 

மனம் தன்னில் அன்பும் கரம் தன்னில் தொண்டும் 

கொண்டாலே போதும் தெய்வீகம் ஆகும் 

அழுதவர் சிரித்திட அழைத்தவர் பசியினைப் போக்கிடல் என்ற ஒன்றே

உயர்வினைக் காட்டும் அமைதியைக் கூட்டும் என்றிடும் சாயி சொல்லே

அன்னம் ப்ரம்மா உணவே தெய்வம் என்பது உயர் வேதம் 

அதிலே உள்ளது உயர் போதம்

பசியின் பிடியில் வாடிடும் மாந்தர்  நாரணர் வடிவாகும்

நாளும் அவர்க்கு சேவைகள் புரி என சாயியின் வாக்காகும்  

வாழ்க்கையின் குறிக்கோள் அன்புடன் சேவை என்பது உயர்வாகும்

நாமும் இன்றே சேவையைச் செய்தல் சாயியை மகிழ்வாக்கும் 

அன்னம் ப்ரம்மா உணவே தெய்வம் என்பது உயர் வேதம் 

அதிலே உள்ளது உயர் போதம்

சாயி கீதம்-7

முதல்பக்கம்

No comments:

Post a Comment