Friday, August 26, 2022

596.எதோ-எதோ தெய்வம் என்போரே(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே) **

எதோ-எதோ தெய்வம் என்போரே
அது இதோ-இதோ சாயி பிரான் காண்பீரே
(2)
வேஷம் கண்டு மனிதன்-என்று எண்ணலாகுமா
அவர் யாவும்-கொண்டு உலகில்-வந்த பரமன்-தானம்மா
(2)
எதோ-எதோ தெய்வம் என்போரே
அது இதோ-இதோ சாயி பிரான் காண்பீரே
(MUSIC)
அவர் பூவுலகில் மானிடனாய்ப் பிறந்தார்
பதின் நான்கினிலே யாவையுமே துறந்தார்
(2)
நமை இறை நிலைக்கு உயர்த்திடவே உதித்தார் 
அவர் நம்முடனே நமக்கெனவே வசித்தார் 
(2)
வேஷம் கண்டு மனிதன்-என்று எண்ணலாகுமா
அவர் யாவும்-கொண்டு உலகில்-வந்த பரமன்-தானம்மா
எதோ-எதோ தெய்வம் என்போரே
அது இதோ-இதோ சாயி பிரான் காண்பீரே
(MUSIC)
பலர் துயர்துடைத்தல் அவர்புரியும் வேள்வி
வினைப் புதிர்களுக்கு அவர்-பதமே சாவி
பிற மதத்தினரும் அடைந்திடுவார் தேடி
அவர் கண்ணசைவில் போகும் ஜன்மம் கோடி (2)
எதோ-எதோ தெய்வம் என்போரே
அது இதோ-இதோ சாயி பிரான் காண்பீரே
(MUSIC)
ஒரு கணப்பொழுதில் தந்திடுவார் தீர்வை
பந்த பவமழிக்கும் அவரின்-கடைப் பார்வை
அவர் இதயத்திலே இருப்பதெல்லாம் தூய்மை
அந்த தூய்மையிலே சிரிப்பதெல்லாம் வாய்மை 
அன்பின் தூய்மையிலே இருப்பதெல்லாம் வாய்மை
 வேஷம் கண்டு  மனிதன்-என்று எண்ணலாகுமா
அவர் யாவும்-கொண்டு உலகில்-வந்த பரமன்-தானம்மா
எதோ-எதோ தெய்வம் என்போரே
அது இதோ-இதோ சாயி பிரான் காண்பீரே
ஆ..ஆஆஆ...ஓ.ஓஓ 



சாயி கீதம்-6

முதல்பக்கம்


No comments:

Post a Comment