Friday, August 26, 2022

595.இதோ இதோ தெய்வம் காண்பீரே(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே) **



இதோ இதோ தெய்வம் காண்பீரே
இவர் நாரணனே என்று சாயி சொன்னாரே
(sm)
இதோ இதோ தெய்வம் காண்பீரே
இவர் நாரணனே என்று சாயி சொன்னாரே
அள்ளி உணவைத் தருகையிலே உள்ளம் நிறையுதாம்
அவர் அள்ளி அதை உண்கையிலே தெய்வம் தோன்றுதாம்
அள்ளி உணவைத் தருகையிலே உள்ளம் நிறையுதாம்
அதை நாரணனே உண்கையிலே தெய்வம் தோன்றுதாம்
இதோ இதோ தெய்வம் காண்பீரே
இவர் நாரணனே என்று சாயி சொன்னாரே
(Music)
பலர் கூடிச் சுவை உணவுதனைச்  சமைப்பார்
அதைப் பூமுகத்தின் அன்பொழுகப் படைப்பார்
பலர் கூடிச் சுவை உணவுதனைச்  சமைப்பார்
அதைப் பூமுகத்தின் அன்பொழுகப் படைப்பார்
பனிக் குளிர்ச்சியினை வார்த்தைகளில் கொடுப்பார்
எதிர் வீற்றிருக்கும் நாரணர்க்கு மகிழ்வாய்
பனிக் குளிர்ச்சியினை வார்த்தைகளில் கொடுப்பார்
எதிரில் வீற்றிருக்கும் நாரணர்க்கு மகிழ்வாய்
சாயி தந்த பாதையிலே மனது மகிழுதாம்
அந்த மகிழ்வினிலே நமதுஉணர்வு எங்கோ  பறக்குதாம் 
இதோ இதோ தெய்வம் காண்பீரே
இவர் நாரணனே என்று சாயி சொன்னாரே
(music)
பலர் உடன் இணைந்து நீ சமைக்கும்  சோறு
அதைப் பசியறிந்து பரிந்து தரும்  போது
அவர் முகத்தினிலே தோன்றும் நன்றி ஆறு
அதில் குடிஇருக்கு அந்த தெய்வம் பாரு
அது கிடைத்திடாத வாழ்வின் பெரும் பேறு
இதோ இதோ தெய்வம் காண்பீரே
இவர் நாரணனே என்று சாயி சொன்னாரே
(music)
நம் சேவையிலே போகுமம்மா நாளை
வந்து துயர் கொடுக்க நமைத் துரத்தும் மாயை
இவை சாயி-திரு வாக்கு எனும் வார்த்தை
அந்த வார்த்தைகளே சாயிக் கண்ணன் கீதை
அந்த வார்த்தைகளே நமது வாழ்க்கைப் பாதை

சாயி தந்த பாதையிலே வினைகள் போகுதாம்
அதன் பிறகு நமது நெஞ்சங்களும்  கோயில் ஆகுதாம்
அள்ளி உணவைத் தருகையிலே உள்ளம் நிறையுதாம்
அவர் அள்ளி அதை உண்கையிலே தெய்வம் தோன்றுதாம்
இதோ இதோ தெய்வம் காண்பீரே
இவர் நாரணனே என்று சாயி சொன்னாரே



No comments:

Post a Comment