Monday, June 27, 2022

593.அலைபோல உடை-ஆடஆட(கட்டோடு குழல் ஆட ஆட) **

அலைபோல உடை-ஆடஆட ...ஆட 
தலை மீது சிகை ஆட ஆட ... ஆட 
அலைபோல உடை-ஆடஆட ... ஆட 
தலை மீது சிகை ஆட ஆட ... ஆட 
இதழோடு  நகையாட ஆட ... ஆட 
ஸ்ரீ சாயி எழிலை நீ பாரு
அலைபோல உடை-ஆடஆட ... ஆட 
தலை மீது சிகை ஆட ஆட 
music

சதிராகக் கரமாட ஆட ...  ஆட
அதனின்று திருநீறு ஓட ... ஓட
சதிராகக் கரமாட ஆட ...  ஆட
அதனின்று திருநீறு ஓட ... ஓட 
நம்மோடு தான் கொஞ்சி ஆட ... ஆட 
மண் வந்த இறையோனைப் பாரு (both)
அலைபோல உடை-ஆடஆட ஆட (both)
தலை மீது சிகை ஆட ஆட  (both)
music

புதிராக மனமாட ஆட ... ஆட
சளைக்காமல் அவர் பாதம் காண ... காண
புதிராக மனமாட ஆட ... ஆட
அலுக்காமல் அவர் பாதம் காண ... காண
எதிராக அவராட ஆட 
கலியாண்ட இறையோனைப் பாரு 
அலைபோல உடை-ஆடஆட ஆட (both)
தலை மீது சிகை ஆட ஆட (both)
MUSIC - ஓஒ .. ஆஆ 

மண்ணை ஒரு தாயாக தந்தையினும் அன்பாக (2)
நம்மையும் தன் மடியிலிட்டு ஸ்வாமியவர் தாலாட்ட
செஞ்சுருட்டிக் குரல் தேனை அள்ளி-செவி தனில் ஊட்ட
உண்டு உண்டு நாம் ஆட வேறென்ன நம் பேறு
வேறென்ன நம் பேறு 
அலைபோல உடை-ஆடஆட  ... ஆட 
தலை மீது சிகை ஆட ஆட
(MUSIC)

வையகத்தில் நாம் வாட நம் குறையை நாம் பாட 
அப்பாவின் மனம் வாட வந்த கதை நீ கேளு 
பிள்ளைகளும் மன்றாடத் தொல்லைகளும் சென்றோட
வந்து சிவன் பாராட இன்பமே என்றாடு  இன்பமே என்றாடு
அலைபோல உடை-ஆடஆட ... ஆட 
தலை மீது சிகை ஆட ஆட 
இதழோடு  நகையாட ஆட ... ஆட 
ஸ்ரீ சாயி எழிலை நீ பாரு
அலைபோல உடை-ஆடஆட  ... ஆட 
தலை மீது சிகை ஆட ஆட

சாயி கீதம்-6

முதல்பக்கம்




 

No comments:

Post a Comment