Thursday, November 18, 2021

571. தாய்போல வந்தே(ஆறோடும் மண்ணில்)

 

தாய்போல வந்தே அன்பைத் தந்தாரு 
நோய் தீர்க்கும் சாயி அன்பின் பேராறு
(2)
கூறாமல் மண்ணில் வந்து கேளாமல் அன்பைத்தந்து
சீராட்டும் தாய்  சாயிராம் 
தாய்போல வந்தே அன்பைத் தந்தாரு 
நோய் தீர்க்கும் சாயி அன்பின் பேராறு
(MUSIC)

மண்ணிலே நீரைத்-தந்து உயிரும்-தந்து ஊணும்-தந்து
அறிவினை ஊட்டும்  கல்வி சாலை தன்னை அழகாய்த்தந்து
நெஞ்சிலே ஈரம் என்னும் வடிவில்-தானும் உள்ளிருந்து
கொஞ்சமும் தன்னை வெளியில் காட்டாத எளிமை-கொண்டு
செய்வாயே அன்பாய்ச் சேவை செய்வாயே 
என்றாரே சாயி தானும் செய்தாரே
தாய்போல வந்தே அன்பைத் தந்தாரு 
நோய் தீர்க்கும் சாயி அன்பின் பேராறு
(MUSIC)

பந்தம்-என்ற ஒன்றில்-கட்டி நம்மை-விட்டதேனம்மா (2)
உலகம்-என்ற மேடைமேலே நானும்-நீயும் ஏனம்மா
நீயும்-
நானும் ஏனம்மா 
அண்ணன்-தங்கை போல-நாமும் வாழவேண்டும் ஆமம்மா
சா..யிதன்  பாசம்-என்னும் திருவுளம்-தானம்மா
திருவுளம் தானம்மா
கூறாமல் மண்ணில் வந்து கேளாமல் அன்பைத்தந்து
சீராட்டும் தாய்  சாயிராம் 
தாய்போல வந்தே அன்பைத் தந்தாரு 
நோய் தீர்க்கும் சாயி அன்பின் பேராறு
(MUSIC)

பொய்விட்டு பேதம் விட்டு அன்பைக் கொண்ட உள்ளம்-கொண்டு
எல்லோரும் சேவை செய்தால் சொர்க்கம்-பூமி தானே அம்மா
பார்-தன்னில் தங்கம்-என்று பேர்-பெற்ற சமிதியைப் பாரு
பார்-தன்னில் தங்கம்-என்று பேர்-கொண்ட சமிதியைப் பாரு
நாமெல்லாம் சேர்ந்தே-கூடி இழுக்கின்ற அது ஓர்-தேரு
அழகான அன்புத்தேரு
(Pause)
கூறாமல் மண்ணில் வந்து கேளாமல் அன்பைத்தந்து
சீராட்டும் தாய்  சாயிராம் 
தாய்போல வந்தே அன்பைத் தந்தாரு 
நோய் தீர்க்கும் சாயி அன்பின் பேராறு
கூறாமல் மண்ணில் வந்து கேளாமல் அன்பைத்தந்து
சீராட்டும் தாய்  சாயிராம் 
(music)
தாய்போல வந்தே அன்பைத் தந்தாரு 
நோய் தீர்க்கும் சாயி அன்பின் பேராறு
(ALL)

No comments:

Post a Comment