Thursday, December 3, 2020

552. நீ அன்பாலே மண்ணாண்ட சாயி(நீ என்னென்ன சொன்னாலும்) ***

 



நீ அன்பாலே மண்ணாண்ட சாயி
இந்த ப்ரம்மாண்டம்-படைத்தாளும் ஸ்வாமி
(2)
நீ தேனூறச் சொல்லும்-சொல் ஏமி
அதைக் கேட்காமல் ஏங்கும் இப்-பூமி
(2)
ஸ்வாமி.. ஸ்வாமி
(MUSIC)
உன்னை இதுவெனத் தவம்-மிக புரிந்து (2)
கொஞ்சமும்-அறிந்..திலர் முனிவரும் முயன்று (2)
\எனினும் மனிதனாய்ப் புவிதனில் பிறந்து (2)
உலவும் எளிமையைப் பணிகிறேன் வியந்து
பணிகிறேன் வியந்து
நீ அன்பாலே மண்ணாண்ட சாயி
இந்த ப்ரம்மாண்டம்-படைத்தாளும் ஸ்வாமி
(MUSIC)
பொன்னில் பொருளினில் மதியினை இழந்து (2)
மங்கும் அறிவினில் இறையுனை மறந்து (2)
என்றும் இருந்திடும் மனிதரை அழைத்து (2)
மாற்றம் அடைந்திட  அருளினை மருந்து
அருள்-எனும் மருந்து
நீ அன்பாலே மண்ணாண்ட சாயி
(MUSIC)
உன்னைச் சரண்-என உன்-பதம் அடைந்து
பர்த்தித் திரு மகன் உன்மடி கிடந்து
உள்ளம்-முழுவதும் உன்-முகம் நிறைந்து
என்றும்-இருந்திட அருள்-எனக்குவந்து ..அருளிடு உவந்து ..
நீ அன்பாலே மண்ணாண்ட சாயி
இந்த ப்ரம்மாண்டம்-படைத்தாளும் ஸ்வாமி
நீ தேனூறச் சொல்லும்-சொல் ஏமி
அதைக் கேட்காமல் ஏங்கும் இப்-பூமி
ஸ்வாமி.. ஸ்வாமி

முதல்பக்கம் 




No comments:

Post a Comment