Sunday, May 31, 2020

481. என்-சாயி ராம் என்-மாயி தான்(கல்யாணமாம் கச்சேரியாம்)

நம்-சாயி ராம் நம்-மாயி தான் அன்பாலிந்த மண்ணாளுவான்

கேள்..கேள்..கேள் கேளுங்களேன்

(1+SM+1)

நம் சாயிராம் கீதத்தினை செய்வோமே எல்லாருமே

நம்-சாயி ராம் நம்-மாயி தான் அன்பாலிந்த மண்ணாளுவான்

கேள்..கேள்..கேள் கேளுங்களேன் + (SM)

வானிருந்த ஆண்டவனே நம்மிடம் தேடி (1+SM+1)

மண்ணில் மனித-உடல் கொண்டு-தந்தான் அவன்-அருள்கோடி(2)

திரும்பிடுவேன் நான் விரைவில் என்றனன் சாயி

அதை நினைத்து-உடன் கூப்பிடுவோம் கீதத்தைப் பாடி

நம்-சாயி ராம் நம்-மாயி தான் அன்பாலிந்த மண்ணாளுவான்

கேள்..கேள்..கேள் கேளுங்களேன்

(MUSIC)

கேளுங்களேன் பாடுங்களேன் அவன்-திருப்..பாட்டு (2)

அதைக் கேட்பதனால் திறந்திடுமே மனம்-எனும் பூட்டு

சாயிபிரான் பாடச்-சொன்னான் பஜனையின் பாட்டு

அதை தினம்-தினம் நாம் பாடிடுவோம் நல்லிசை சேர்த்து

நம்-சாயி ராம் நம்-மாயி தான் அன்பாலிந்த மண்ணாளுவான்

கேள்..கேள்..கேள் கேளுங்களேன்

நம் சாயிராம் கீதத்தினை செய்வோமே எல்லாருமே

(MUSIC)

லோகத்திலே மோகத்திலே இருப்பது மோதல் (2)

அது இருக்கும்-வரை தொடர்ந்து-வரும் நமக்கந்த சாதல்

அறிந்திடுவாய் நன்கிதனை என்று சொன்னானே

அந்த சாயிபிரான் நமக்கெனவே பிறப்பெடுத்தானே

நம்-சாயி ராம் நம்-மாயி தான் அன்பாலிந்த மண்ணாளுவான்

கேள்..கேள்..கேள் கேளுங்களேன்

நம் சாயிராம் கீதத்தினை செய்வோமே எல்லாருமே

No comments:

Post a Comment